தக்­காளிப் பழங்கள் வயிற்று புற்­றுநோய்   பர­வு­வதை தாம­தப்­ப­டுத்தும் என புதிய ஆய்­வொன்று  கூறு­கி­றது. 

அந்தப் பழங்­க­ளி­லுள்ள லைகோபென் என்ற இர­சா­யனம்  புற்­று­நோய்க்கு எதி­ராக போராடும்  ஒன்­றாக  ஏற்­க­னவே  மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுகள் தெரி­விக்­கின்ற நிலையில்,  இத்­தா­லிய புதிய ஆய்­வா­னது  தக்­காளிப் பழங்­களில் காணப்­படும் விசேட இர­சா­யனம் மட்­டு­மல்­லாது அதி­லுள்ள அனைத்து உள்­ள­டக்­கங்­களும்  புற்­று­நோய்க்­கு எதி­ராகப்  போராடும்  மருத்­துவத் தன்­மையைக் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கி­றது. 

தக்­காளிப் பழங்கள் பல்­வேறு வகை­யான வயிற்றுப் புற்­று­நோய்­க­ளுக்கு எதி­ரா­கவும் போராடும் வல்­ல­மையைக் கொண்­டவை என மெர்­கோ­லி­யன்கோ ஆய்வு நிலை­யத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள்  கூறு­கின்­றனர். அந்தப் பழங்கள் புற்­றுநோய்க் கலங்கள் தோன்­று­வதை மட்­டு­மல்­லாது புதி­ய­தாக தோன்­றிய புற்­றுநோய்க் கலங்கள் பர­வு­வ­தையும் தாம­தப்­ப­டுத்­து­வது தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக  மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் அந்தோனியோ சியோர்டனோ தெரிவித்தார்.