வானிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் முல்லைத்தீவில் அறிமுகம் - 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

09 Dec, 2024 | 12:48 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தினால் Adaptation Fund நிதி உதவியுடன் நிறைவேற்று நிறுவனங்களாகிய சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் வானிலை மாற்றம் மற்றும் வானிலை மாறுபாட்டை எதிர்கொள்வது தொடர்பான திட்ட மீளாய்வுக் கூட்டம் கடந்த 4ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இத்திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் வானிலை மாற்றம் மற்றும் வானிலை மாறுபாடுகளினால் பாதிக்கப்படக்கூடிய விவசாய, மீன்பிடி சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டுள்ளது.

இக்கூட்டம் மேலதிக மாவட்ட செயலாளர் S.குணபாலன் தலைமையில் UN-HABITAT இலங்கைக்கான நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஹர்சினி கலாங்கொட மற்றும் திட்ட முகாமையாளர், பொறியியலாளர் M.S.M அலீம் மற்றும் 35 தொழில்நுட்ப திணைக்கள அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் தனது ஆரம்ப உரையில், திட்டத்தின் வெற்றிக்கு பங்குதாரர்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும், உப்புநீர் உட்புகுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், 15 சிறு நீர்ப்பாசன குளங்களை புனரமைத்தல், அவசர நிலைமைகளின்போது மக்கள் வெளியேறும் பாதைகளை புனரமைத்தல், வானிலை மாற்றங்களினால் ஏற்படும் அழிவுகளை தாங்கக்கூடிய கழிவறைகளை கட்டுதல், காலநிலையை தாங்கும் விவசாயத்தை ஊக்குவித்தல், பாதிக்கப்படக்கூடிய மீன்பிடி குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டமானது மாவட்ட அளவிலான திட்ட ஆதரவுக் குழுவின் ஒப்புதல் மற்றும் உதவியுடன் சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலில் அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  

இந்த முயற்சிகளின் மூலம் வறட்சி, வெள்ளம், உப்புநீர் உட்புகுதல் போன்ற காலநிலை அபாயங்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தில் இத்திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட இடங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவான எதிர்காலத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17