அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது ரஸ்யா

Published By: Rajeeban

09 Dec, 2024 | 09:48 AM
image

cnn-

guardian

சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் நீண்ட கால ஆட்சியின் வீழ்ச்சியை  பலர் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவர் எங்கிருக்கின்றார் என்பது குறித்த பல வதந்திகள் வெளியாகியிருந்தன,மிகவும் மர்மம் நிறைந்த ஒரு நாளின் பின்னர் அவர் மொஸ்கோவிற்கு சென்றுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இந்த மர்மம் முடிவிற்கு வந்துள்ளது. 

‘;ஆசாத்தும் அவரது குடும்பத்தினரும் மொஸ்கோவில் தரையிறங்கியுள்ளனர் மனிதாபிமான காரணங்களிற்காக மொஸ்கோ அவர்களிற்கு புகலிடம் வழங்கியுள்ளது என கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்ததாக டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் எழுச்சி மீண்டும் ஆரம்பித்தது முதல் அவர்கள் துரிதமாக முன்னேறி வந்த தருணங்களில் ஆசாத் அதிகளவு தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. கடந்த வாரம் ஈரான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தவேளை கிளர்ச்சிக்காரர்களின் முன்னேற்றத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக அவர் சூளுரைத்திருந்தார்

அதன் பின்னர் அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளமை குறித்து அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கிளர்ச்சிக்காரர்கள்  டமஸ்கஸினை சுற்றிவளைத்தவேளை ஆசாத் நகரில் இருக்கவில்லை என விடயறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தன.

அவரது ஜனாதிபதி மாளிகையில் வழமை போல பாதுகாப்பு உத்தியோகத்தர்களை காணமுடியவில்லை. அவர் அங்கிருந்திருந்தால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்திருப்பார்கள் என தெரிவித்த அந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னரே தலைநகரிலிருந்து ஆசாத் வெளியேறியிருக்கலாம் என்ற ஊகத்தை வெளியிட்டன.

 ஜனாதிபதியின் அலுவலகம்  அசாத்வெளியேறிவிட்டார் என்பதை ஆரம்பத்தில் மறுத்திருந்தது,சில வெளிநாட்டு ஊடகங்கள் பொய்களை வதந்திகளை பரப்புகின்றன என அது குற்றம்சாட்டியிருந்தது. தலைநகரை கைப்பற்றிய பின்னர் ஆசாத் தப்பியோடிவிட்டார் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர், அவரை தேடும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்,கிளர்ச்சியாளர்களில் சிலர் பொதுமக்களுடன் இணைந்து ஆசாத்தின் மாளிகையை சேதமாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

வதந்திகளிற்கு மத்தியில் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சு என அறிவித்தது. அதன் பின்னர் ஆசாத் மொஸ்கோ சென்றுவிட்டார் என்ற உண்மை வெளியானது. பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி ரஸ்யாவின் பாதுகாப்பிலேயே நாட்டிலிருந்து வெளியேறினார் என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு படையினர் வெளியேறுவதற்கு முன்னதாக ஆசாத்துடன் விமானமொன்று டமஸ்கஸ் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் பிரிட்டனை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

பிளைட்ராடர் இணையத்தளம் அந்த விமானத்தின் பறப்பை அவ்வேளை பதிவு செய்யவில்லை.

எனினும் சாம் விங்ஸ் எயர்லைன்ஸ் எயர்பஸ் 320 பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை தினம் சார்ஜாவிற்கு புறப்பட்டுள்ளது.அந்த விமானம் சார்ஜாவில் தரையிறங்கியுள்ளது ஆனால் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியின் ஆலோசகர் அந்த விமானத்தில் ஆசாத் இருந்தாரா என்பது தெரியாது என  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஞாயிற்றுக்கிழமை காலை டமஸ்கஸிலிருந்து சிரிய விமானத்தில் ஆசாத் புறப்பட்டார் என சிரிய இராணுவ அதிகாரிகள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் சரக்குவிமானம் விமானநிலையத்திலிருந்து தெரிவிக்கப்படாத பகுதிக்;கு புறப்பட்டு சென்றது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம் முதலில் தலைநகரிலிருந்து கிழக்கே சென்றது பின்னர் வடமேற்காக திரும்பி மத்தியதரை கரையோரமாக சென்றது இந்த பகுதி ஆசாத்தின் அலவைட் சமூகத்தினரின் வலுவிடம் மேலும் ரஸ்யாவின் தளம் இங்கேயே உள்ளது.

சிரியாவின் வடமேற்கில் ரஸ்யாவின் விமானப்படை தளம் அமைந்துள்ள லடாக்கியாவிற்கு அசாத் சென்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆசாத் சென்றடைய விரும்பிய இடம் ரஸ்யாவே, ஆசாத்தின் நீண்ட கால நண்பர் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர் விமானப்படை மற்றும் இராணுவ உதவிகள் மூலம் ஆசாத்திற்கு உதவினார். மொஸ்கோ இனி ஆசாத்தின் நிரந்தர வதிவிடமாக இருக்கலாம்; - ஆனால் இது இரண்டுதசாப்தங்களிற்கு மேல் அதிகாரத்தில் இருந்தவருக்கான இழிவானது ஒரு முடிவாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசியலமைப்பில் செனட் சபை? தவறுகளிலிருந்து...

2025-01-23 16:49:05
news-image

இலங்கையில் சமூக பணி

2025-01-23 11:56:18
news-image

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்...

2025-01-23 10:45:23
news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15
news-image

"தையிட்டி விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள்...

2025-01-21 20:27:32
news-image

அதிகாரம் படைத்தவர்களுடன் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாமல்...

2025-01-21 08:45:36
news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32