(நெவில் அன்தனி)
போர்ட் எலிஸபெத், சென். ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கை - தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்டில் எதுவும் நிகழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
அப் போட்டியில் 348 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை, போட்டியின் 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு இலங்கைக்கு மேலும் 143 ஓட்டங்கள் தேவைப்படுவதுடன் தென் ஆபிரிக்காவுக்கு மேலும் 5 விக்கெட்கள் தேவைப்படுகிறது.
போட்டியில் ஒரு நாள் முழுவதும் மீதம் இருப்பதால் இலங்கை அணி மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலையில் இருக்கிறது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தலா 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, முன்னாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரின் கைகளிலேயே இலங்கையின் தலைவிதி தங்கியிருக்கிறது.
இலங்கை அணியில் எஞ்சியிருக்கும் பிரதான துடுப்பாட்ட வீரர்களான அவர்கள் இருவரும் கடைசி நாளான திங்கட்கிழமை முதல் இரண்டு மணித்தியாலங்கள் தாக்குப் பிடித்தால் இலங்கை வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த வாய்ப்பு உள்ளது.
அவர்கள் இருவரில் ஒருவர் ஆட்டம் இழந்தாலும் அது அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 358 ஓட்டங்களையும் இலங்கை 328 ஓட்டங்களையும் பெற்றன.
தென் ஆபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 317 ஓட்டங்களைப் பெற்றது.
எண்ணிக்கை சுருக்கம்
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 358 (கய்ல் வெரின் 105, ரெயான் ரிக்ல்டன் 101, டெம்பா பவுமா 78, லஹிரு குமார 79 - 4 விக்., அசித்த பெர்னாண்டோ 102 - 3 விக்., விஷ்வா பெர்னாண்டோ 65 - 2 விக்.)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 328 (பெத்தும் நிஸ்ஸன்க 89, கமிந்து மெண்டிஸ் 48, தினேஷ் சந்திமால் 44, ஏஞ்சலோ மெத்யூஸ் 44, டேன் பெட்டர்சன் 71 - 5 விக்., கேஷவ் மஹாராஜ் 65 - 2 விக்., மார்க்கோ ஜென்சென் 100 - 2 விக்.)
தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 317 (டெம்பா பவுமா 66, ஏய்டன் மார்க்ராம் 55, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 47, டேவிட் பெடிங்டன் 35, ப்ரபாத் ஜயசூரிய 129 - 5 விக்., விஷ்வா பெர்னாண்டோ 47 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM