19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பங்களாதேஷ்

Published By: Vishnu

08 Dec, 2024 | 11:58 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 195 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பங்களாதேஷ் சம்பியனாகியிருந்தது.

இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பங்களாதேஷ் இளையோர் அணிக்கு இலங்கையின் நவீத் நவாஸ் பயிற்சி அளித்து வருகின்றார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் சம்பியனானபோதும் நவீத் நவாஸ் பயிற்றுநராக இருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹம்மத் ஷிஹாப் ஜேம்ஸ் (40), ரிஸான் ஹொசெய்ன் (47) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 62 ஓட்டங்கள் பங்களாதேஷை நல்ல நிலையில் இட்டது.

அவர்களை விட பரித் ஹசன் 39 ஓட்டங்களையும் ஸவாத் அப்ரார் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் யூதாஜித் குஹா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் ராஜ் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சேத்தன் ஷர்மா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்திய துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் மொஹம்மத் அமான் (26), ஹார்திக் ராஜ் (24),  கே.பி. கார்த்திகேயா (21), சி. அண்ட்றே சித்தார்த் (20) ஆகிய நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸிஸுல் ஹக் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல் பஹாத் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பங்களாதேஷ் பந்துவீச்;சாளர் இக்பால் ஹொசெய்ன் வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42