(ஆர்.ராம்)

2009ஆம் ஆண்டு  முன்னெ­டுக்­கப்­பட்ட இறுதி யுத்­தத்தின் கொடூ­ரத்தில் தமது உயிர்­களைத் தியா கம் செய்­த­வர்­களின் நினை­வாக நாளை வியா­ழக்­கி­ழமை முள்­ளி­வாய்க்கால் பூமியில் உணர்­வெழுச்­சி­யுடன் நினை­வேந்தல் நிகழ்வு  அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.

வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் நடை­பெறும் இந்­நி­னை­வேந்தல் நிகழ்­விற்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலைமை தாங்­க­வுள்ளார். 

இந்­நி­கழ்­வா­னது நாளை காலை 9.30 மணி­யவில் மூன்று நிமிட மௌன அஞ்­ச­லி­யுடன் ஆரம்­ப­மாக அத­னைத்­தொ­டர்ந்து மர­ணித்த ஆன்­மாக்­க­ளுக்­காக பிரார்த்­த­னையும் ஈகைச்­சு­டரும் ஏற்­றப்­ப­ட­வுள்­ளன. அத­னைத்­தொ­டர்ந்து வட­மா­காண முத­ல­மைச்சர் நினை­வேந்தல் உரையை ஆற்­ற­வுள்ளார். 

முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் நிகழ்ந்து எட்டு ஆண்­டுகள் கடக்­கின்ற நிலையில் நடை­பெ­ற­வுள்ள இந்த நினை­வேந்தல் இம்­மு­றை ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களின் பங்­கேற்­க­வுள்­ளனர். 

பொது­மக்கள் தமது உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் வல­யத்­திற்கு வருகை தரு­வ­தற்­காக விசேட போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக நினை­வேந்தல் நிகழ்வின் ஏற்­பாட்­டுக்­கு­ழுவின் உறுப்­பி­னரும் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான து.ரவி­கரன் தெரி­வித்­துள்ளார்.

மேலும் தற்­போது நினை­வேந்தல் வல­யத்தை சிர­ம­தானம் செய்யும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு நினை­வேந்­த­லுக்­கான அடுத்த கட்ட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றது. அத்­துடன் வடக்கு கிழக்கு பகு­தி­களில் உள்ள அனைத்து உற­வு­களும் உயிர் நீத்த ஆன்­மாக்­க­ளுக்­கான தமது அஞ்­ச­லியை செலுத்­து­வ­தற்­காக அணி­தி­ர­ளு­மாறு ஏற்­பாட்­டுக்­குழு தெரி­வித்­துள்­ளது. 

இதே­வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் பிறி­தொரு நினை­வேந்தல் நிகழ்வும் வடக்­கிலும் கிழக்­கி­லும்­ந­டை­பெ­ற­வுள்­ளது. வடக்கு மாகா­ணத்தில் ஏ32வீதியில் புதுக்­கு­டி­யி­ருப்பு 46ஆம் மைல்கல்லை அண்­மித்து புனித சின்­னப்பர் ஆலய வீதி­யு­டாக சென்­ற­டையும் கற்­க­ரையில் பிற்­பகல் 2.30இற்கு இந்நிகழ்வு நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­னை­வேந்தல் நிகழ்­வா­னது அக்­கட்­சியிக் முல்லை மாவட்ட செய­லாளர் சிந்­துஜன் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.

மேலும் கிழக்கு மாகா­ணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் வாகரையில் காலை 9.30இற்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இதனை விடவும் வடக்கு கிழக்கில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறுபட்ட தரப்பினராலும் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.