சிரியாவின் பசார் அல் ஆசாத்தின் ஆட்சியை வீழ்ச்சியை மேற்குலகநாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆசாத்தின் காட்டுமிராண்டி அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சிரியமக்களிற்கும் அவர்களது துயரத்திற்கும் நிச்சயமற்ற சூழலில் அவர்களின் பொறுமைக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன்,அமைதி சமாதானம் ஐக்கியம் ஆகியவற்றிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்,மத்திய கிழக்கில் அனைவரினதும் பாதுகாப்பு குறித்து பிரான்ஸ் அர்ப்பணிப்புடன் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசாத்தின் வீழ்ச்சியை சிறந்த செய்தி என தெரிவித்துள்ள ஜேர்மனியின் சான்சிலர் ஒலாப்ஸ்கோல்ப்ஸ் சிரியாவில் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பசார் அல் அசாத் தனது மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தினார்,அவரது மனச்சாட்சியில் ஆயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசாத் அரசாங்கம் உண்மையில் வீழ்ச்சியடைந்துவிட்டது என்றால் பிரிட்டன் அதனை வரவேற்கின்றது என பிரிட்டனின் பிரதி பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM