நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 08 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நேற்றைய தினம் சனிக்கிழமை (7) தமிழக கடற்தொழிலாளர்கள் 8 பேரை கைது செய்ததுடன், அவர்களது இரு படகுகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதவான் சாளினி ஜெயபாலசந்திரன் முன்னிலையில் இன்றைய தினம் (8) ஆஜர்படுத்தியபோது, 08 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM