இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முன்னிலை 

08 Dec, 2024 | 04:59 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அவுஸ்தேரேலியா இலகுவாக வெற்றிபெற்றது.

அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் மிகத் திறமையாக பந்துவீசி 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து தனது அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

இரண்டாவது போட்டி முடிவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியதுடன் முதலிடத்தில் இருந்துவந்த இந்தியா 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் தென் ஆபிரிக்கா இப்போதைக்கு 2ஆம் இடத்தில் இருக்கிறது.

இரண்டரை தினங்கள் கூட தாக்குப்பிடிக்காத அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்க 128 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்தியாவின் கடைசி 5 விக்கெட்களில் 47 ஓட்டங்களே பெறப்பட்டது.

முதலாவது இன்னிங்ஸில் போன்றே நிட்டிஷ் குமார் ரெட்டி 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். இவர் முதல் இன்னிங்ஸிலும் இதே எண்ணிக்கையையே பெற்றார்.

ரிஷாப் பான்ட், ஷுப்மான் கில் ஆகியோர் தலா 28 ஓட்டங்களையும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். தனது 64ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பெட் கமின்ஸ் 13ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களைக் குவித்தது.

ட்ரவிஸ் ஹெட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார்.

முதல் இன்னிங்ஸில் நிறைவில் 157 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 175 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனைத் தொடர்ந்து 19 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 180 (நிட்டிஷ் குமார் ரெட்டி 42, கே.எல். ராகுல் 37, ஷுப்மான் கில் 31, மிச்செல் ஸ்டாக் 48 - 6 விக்., பெட் கமின்ஸ் 41 - 2 விக்., ஸ்கொட் போலண்ட் 54 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 337 (ட்ரவிஸ் ஹெட் 140, மானுஸ் லபுஷேன் 64, நேதன் மெக்ஸ்வீனி 39, ஜஸ்ப்ரிட் பும்ரா 61 - 4 விக்., மொஹமத் சிராஜ் 98 - 4 விக்.)

இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 175 ( நிட்டிஷ் குமார் ரெட்டி 42, ஷுப்மான் கில் 28,  ரஷாப் பான்ட் 28, பெட் கமின்ஸ் 57 - 5 விக்., ஸ்கொட் போலண்ட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 60 -  2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 19 ஓட்டங்கள் - விக்கெட் இழப்பின்றி 19.

ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08