மலேசிய பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் கலந்துகொள்ள பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு “அரசியல் சார்பற்று தமிழராய் ஒன்றிணைவோம்” என அனைத்து மலேசிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
11ஆவது ஆண்டு உலகத் தமிழ் அம்சாவளி மாநாட்டுக்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தர்ராஜுவின் பரிந்துரையின் அடிப்படையில் பினாங்கு மாநில அரசின் ஆதரவுடன் நடைபெறவுள்ள தமிழர்களின் கலை, கலாசாரம், பாரம்பரிய உணவு, உடை போன்ற நிகழ்வுகளும் சின்னத்திரை கலைஞர்கள் பங்குபற்றும் ‘சுழலும் சொற்போர்’ நிகழ்வும் ஜனவரி 04ஆம் திகதி நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இரண்டாம் நாள் நிகழ்வாக, தமிழர்களை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ‘குளோபல் கான்ஃபரன்ஸ்’ மாநாட்டை மலேசிய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் துணை அமைச்சர் டத்தோ ரமணன், டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு முன்னிலையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நான்காவது அமர்வாக, Women LeadershipForum என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் தொழிலதிபர்கள், சிறு, குறுந்தொழில் அதிபர்கள், சுய உதவி குழுக்கள் இணைந்து நடத்தவுள்ளனர். அதன் மூலம் நம் தமிழ் சமுதாயம் பொருளாதாரத்தில் உயரும் என டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு அரசியல் சார்பற்ற மலேசியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் செனட்டர்களையும் அவர் அழைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM