மின்கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு பேணுவதற்கு பரிந்துரை

08 Dec, 2024 | 03:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நடைமுறையில் உள்ள மின்கட்டணத்தை எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு திருத்தம் செய்யாமல் அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.

 மின்கட்டண திருத்தம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்து மின்சார சபை இந்த பரிந்துரையை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது. 

பொதுமக்களின் அபிப்ராயங்களை கோரியதன் பின்னர் இந்த பரிந்துரை தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்கட்டணத்தின் பிரகாரம் வருடத்தில் இரு தடவைகள் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதாக கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இருப்பினும் 2023 ஆம் ஆண்டு எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகிய மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கருத்திற் கொண்டு வருடத்தில் நான்கு தடவைகள் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

2024 ஆம் ஆண்டு மார்ச் 04 மற்றும் ஜுலை 15 ஆகிய திகதிகளில் மின்கட்;டணத்தை திருத்தம் செய்ய இலங்கை மின்சார சபை ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டிய  மூன்றாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை கடந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தது.

மூன்றாவது மின்கட்டண திருத்த பரிந்துரையில்  மின்கட்டணத்தை நூற்றுக்கு 6 சதவீதத்தால் குறைக்க மின்சாரசபை உத்தேசித்திருந்தது.

இருப்பினும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.பரிந்துரைகளின் தரவுகளில் குளறுபடிகள் காணப்படுவதால் அவற்றை திருத்தி சரியான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக்கு அறிவுறுத்தியது.

இதற்கமைய மின்சார சபை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (2024.12.06) திருத்தப்பட்ட மின்கட்ட திருத்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது. 

புதிய திருத்தத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்பட்ட 6 சதவீத மின்கட்டண குறைப்பு இரத்து செய்யப்பட்டு, எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தற்போதைய கட்டண திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சார சபை 136 பில்லியன் முதல் 200 பில்லியன் ரூபா வரை மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் ஒக்டோபர் மாதம் முன்வைத்த 6 சதவீத கட்டண குறைப்பை புதிய கட்டண திருத்ததில் இரத்து செய்துள்ளமை ஆச்சரியத்துக்குரியது.

மொத்த மின்னுற்பத்தியில் 56 சதவீதமளவில் நீர்மின்னுற்பத்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படுகிறது. எரிபொருள் ஊடாக 5 சதவீதம் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00