உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி கதிரை சின்னத்தில் களமிறங்க தீர்மானம் ; ஜனவரி முதல் மறுசீரமைப்புக்களும் ஆரம்பமாகும் - லசந்த அழகியவண்ண

08 Dec, 2024 | 03:34 PM
image

(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியில் கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொருலாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வினவியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்று சபை கூட்டமும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டமும் இடம்பெற்றது. 

இதன் போது உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 341 தொகுதிகளிலும்  போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவொன்றும், மறுசீரமைப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும்.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. 

கூட்டணி தொடர்பில் சில தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் என்ற ரீதியில் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

கதிரை சின்னத்திலேயே இம்முறை தேர்தலில் களமிறங்குவோம். எமது கூட்டணி சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதை புதிய ஜனநாயக முன்னணியிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00