வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை : பலர் மீது வழக்குப் பதிவு

Published By: Digital Desk 2

08 Dec, 2024 | 06:22 PM
image

வவுனியா நகரம் மற்றும் நகரை அண்மித்த சில பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில் அதிகரித்து வருகிறது.  

இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது டயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என்பவை பல இடங்களில் காணப்பட்டதுடன், அந்த பொருட்களுக்குள் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகளும் இனங்காணப்பட்டன.

நுளம்பு குடம்பிகள் உருவாகுமளவு சூழலை அசுத்தமாக வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேவேளை, டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அவற்றை சூழவுள்ள பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56
news-image

நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள்...

2025-01-23 17:41:01