ஆர்.ராம்
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும் இந்திய மற்றும் சீன இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே தலைமையிலான குழுவினருக்கும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும் இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நினைவு கூர்ந்ததுடன் நன்றிகளையும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பயணத்தில் முதலீடுகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவானதாக முன்கொண்டு செல்வதற்கும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் இலங்கை கரிசனைகளைக் கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே தனது வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய இராஜதந்திரிகளுடனான சந்திப்பு நிறைவடைந்து சில மணி நேர இடைவெளியில் சீனாவின் இராஜதந்திரிகளும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜன்வெய் ஷ{ தலைமையிலான குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகளை இருதரப்பினரும் நினைவு கூர்ந்ததோடு எதிர்காலத்திலும் பரஸ்பர புரிதலுடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் கலந்துரையடியுள்ளனர்.
அத்துடன், சீனாவின் நன்கொடைகளுக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நன்றிகளைத் தெரிவித்ததோடு எதிர்கால முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒத்துழைப்புகள் குறித்தும் உரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM