நுவரெலியா, இ.போ.ச டிப்போவில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை சிலர் கொலை செய்துவிட்டு, சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை டிசம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா லங்கம டிப்போவில் பணியாற்றும் காசாளர் (வயது 55), சாரதி (வயது 40), சாரதியின் நண்பர் (வயது 36) ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பதுளை, மஹவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 6ஆம் திகதி நுவரெலியா டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரை சிலர் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த 10 இலட்சத்து 52 ஆயிரத்து 167 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.
நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயது நபரே கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இக்கொலை மற்றும் பணம் கொள்ளைச் குற்றங்கள் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM