சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், விமான நிலையத்தின் வருகை முனையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினரால் நேற்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடிகல பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய பெண்ணும், கண்டி கலகெதர பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பெண்ணுமே கைதாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் துபாயில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களின் பயணப் பொதிகளில் 47,200 "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 236 சிகரெட் கார்டூன்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதனையடுத்து, இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், சிகரெட்டுகளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தல், கடத்தல் மற்றும் கைவசம் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 11ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM