இலங்கையின் ஹேமாஸ் மருத்துவமனை, சிறுநீரக மாற்று சிகிச்சைகளுக்கு 3D laparoscopic donor nephrectomies தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் புதிய சாதனைYAI நிலைநாட்டியுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது.
நீடித்த சிறுநீரக வியாதி அதிகரிக்கும் அபாய நிலையுடன், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளுக்கான தேவையும் நாட்டில் அதிகரித்துச் செல்லும் நிலையில், இந்த தொழில்நுட்ப மேம்பாடு இலங்கைக்கு மிகவும் பயனளிக்கும்.
சிறுநீரகத்தை தானமாக வழங்குவதில் 3D laparoscopic வழிமுறையானது மாற்று அறுவைச் சிகிச்சையில் பாரியதொரு முன்னேற்றமாகக் காணப்படுகின்றது.
பாரம்பரிய சிறுநீரக அறுவைச் சிகிச்சை பொதுவாக,
திறந்த முறை அறுவைச்சிகிச்சையாக காணப்படுவதுடன்
அடிவயிற்றுப் பகுதியில் கீறியே அந்த வெட்டினூடாக இதனை மேற்கொள்ள வேண்டி உள்ளதுடன்,
சிகிச்சையின் பின்னர் குணமடைவதற்கு நீண்ட காலம் எடுக்கின்ற நிலையில், சிக்கல் நிலைமைகளின் கீழ் கூடுதலான ஆபத்துக்களையும் கொண்டுள்ளது.
அதற்கு மாறாக, 3D laparoscopic தொழில்நுட்பமானது குறைந்தபட்ச ஊடுருவலுடன் அதிநவீன அறுவைச்சிகிச்சை நடைமுறைக்கு வழிகாட்டுகின்ற நவீன 3D படவாக்கத்தைப் பயன்படுத்துகின்றது.
சிறு அளவிலான தளம்புகள்
குறைந்த வலி
விரைவாக குணமடைதல்
அறுவைச்சிகிச்சையின் பின்னர் ஏற்படும் சிக்கல்களைக் குறைத்தல்
குடலிறக்க நோய் ஏற்படும் ஆபத்துக்கள் குறைவடைதல்
குறைந்த அளவிலான தளும்புகளுடன் சிகிச்சை நிறைவடைந்து வைத்தியசாலையை விட்டு விரைவாக வெளியேறும் அனுபவத்தை நோயாளர்களுக்கு வழங்குவதுடன்,
சிறுநீரகத்தை நன்கொடையளிப்பவருக்கு வியாதிகள் ஏற்படல் மற்றும் மரணம் சம்பவித்தல் ஆகியவற்றையும் ஒட்டுமொத்தமாக குறைக்கின்றது.
சிறுநீரக தானம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உயிரைக் காக்கும் இந்த மனிதாபிமான முயற்சியை கருத்தில் கொள்வதற்கு இன்னும் கூடுதலான அளவில் மக்களை ஊக்குவித்தலில் ஹேமாஸ் மருத்துவமனை முன்னின்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
3D laparoscopic வழிமுறையுடன் தொடர்புபட்ட, சிகிச்சையின் பின்னர் விரைவாக குணமடைவதற்கு வாய்ப்பு மற்றும் சிக்கல்கள் தொடர்பான ஆபத்துக்கள் குறைவடைதல் போன்ற சிறுநீரகத்தை தானமாக வழங்கக்கூடியவர்கள் கருத்தில் கொள்ளக்கூடிய பல அக்கறைகளைப் போக்க உதவி, அதன் மூலமான தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையின் தேவையை எதிர்நோக்கியுள்ள பலரின் உயிர்களைக் காக்க முடியும்.
தொடர்ந்தும் அதிநவீன மருத்துவ சிகிச்சைமுறைகளை அறிமுகம் செய்து வருகின்ற ஹேமாஸ் மருத்துவமனை, நோயாளர்களுக்கு கிட்டும் பலன்களை மேம்படுத்தி, ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
3D laparoscopic nephrectomies சிகிச்சை முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளமை, நோயாளர்கள் சாத்தியமான அளவுக்கு மிகச் சிறந்த சிகிச்சையையும், பலன்களையும் பெறுவதை உறுதி செய்து, அதிநவீன தொழில்நுட்பத்தை கருணை மிக்க பராமரிப்புடன் இணைக்கும் ஹேமாஸ் மருத்துவமனையின் குறிக்கோளை பிரதிபலிக்கின்றது.
இந்த அதிநவீன சிகிச்சை முறை குறித்த கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள, தயவு செய்து businessdev.twg@hemashospitals.com என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது 077 362 7866 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM