இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

08 Dec, 2024 | 09:43 AM
image

இலங்கையின் புகழ்பெற்ற இளம் ஃபோர்மியுலா 3 பந்தய வீரரான யெவான டேவிட், இலங்கை ஃபோர்மியுலா 3 பந்தயத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தமை தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார். 

2024 நவம்பர் 27 ஆம் திகதி கொழும்பு 80 க்ளப் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இதுவரையில் யெவானின் வெற்றிகளில் பங்களிப்பு வழங்கியிருந்த பலம் வாய்ந்த அணியினரை வெளி உலகுக்கு அறிமுகம் செய்திருந்தார். 

அத்துடன் யெவான் இதுவரையில் கடந்து வந்த வெற்றிப் பயணம் தொடர்பிலான விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், இலங்கை சார்பாக அவர் எய்தியுள்ள சாதனைகளை கொண்டாடியிருந்தார்.

சர்வதேச புகழ்பெற்ற பந்தய வர்ணனையாளரான ஜேக் சான்சனின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இவர் யெவானின் பந்தய பயணம் தொடர்பான ஆழமான விளக்கங்களை வழங்கியிருந்தார். “இலங்கையை ஃபோர்மியுலா 1 உலகுக்கு கொண்டு செல்லும் நபர்” என யெவானை இவர் அறிமுகம் செய்திருந்தார்.

சகல ஃபோர்மியுலா 3 பிரிவிலும் பல தடவைகள் வெற்றியீட்டியுள்ள இலங்கையின் முதலாவது ஃபோர்மியுலா பந்தய வீரரான யெவான், தனது நோக்கம், இலட்சியம் மற்றும் வாழ்க்கையை மாற்றுவதில் ரேசிங்கின் வலிமை தொடர்பான விடயங்களை நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

அண்மையில் மொன்ஸாவில் பெற்றுக் கொண்ட வெற்றி தொடர்பில் யெவான் குறிப்பிடுகையில்,

 “இலங்கையில் உள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், அனைவரிடமிருந்தும் கிடைக்கும் சிறந்த ஆதரவு தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்றார்.

யெவானின் அறிமுக ஆண்டில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகள் தொடர்பில் அவரின் முகாமையாளர் ஹொரியா டொட்டு குறிப்பிடுகையில்,

 “இந்த ஆண்டு நாம் அவதானித்த பெருமளவு முன்னேற்றம் மற்றும் திறமையின் அடிப்படையில், யெவானுக்கு ஆகாயமே எல்லையாக அமைந்திருக்கும்.” என்றார்.

யெவானின் உடற்தகைமை பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் ஸ்டொட் மோட்டார் விளையாட்டில் முன்னேறுவதற்கு உடல் மற்றும் உளசார் நிலையின் முக்கியத்துவம் மற்றும் அவற்றில் யெவானை தயார்ப்படுத்துவது தொடர்பில் குறிப்பிடுகையில், 

“யெவானின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் செயற்பாடுகள் போன்றன தலைமுறையில் ஒரு தடவை மாத்திரமே வெளிப்படுத்தப்படுவதாக அமைந்துள்ளது.

யெவானிடம் நான் தொடர்ச்சியாக அவதானிப்பது, ஃபோர்மியுலா 1 வரை முன்னேறிய, நான் முன்னர் பணியாற்றிய பந்தய வீரர்களை விட இவரின் நடவடிக்கைகள் சிறப்பானவையாக அமைந்துள்ளன.” என்றார். 

யெவானின் சர்வதேச ஊடக உறவுகள் மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் அண்டி ஸ்டோபார்ட் குறிப்பிடுகையில்,

“ஒன்லைனில் யெவானின் வேகமாக அதிகரித்து வரும் பிரசன்னம், வெளிப்படுத்தல்கள், பெறுபேறுகள் மற்றும் சர்வதேச ஊடக நாட்டம் போன்றன இவரை இலங்கையின் தூதுவராக சர்வதேச அரங்கில் திகழச் செய்துள்ளது.” என்றார்.

யெவான் டேவிட் பற்றி

17 வயது நிரம்பிய, இலங்கையைச் சேர்ந்தவரும், மோட்டார் பந்தய உலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமாக திகழ்கின்றார். 2024 ஒக்டோபர் மாதத்தில், இத்தாலியின் மொன்ஸாவில் நடைபெற்ற பெருமைக்குரிய Euroformula Open Championship இல் வெற்றியீட்டியதனூடாக இதனை வென்ற முதலாவது இலங்கையை எனும் பெருமையை பெற்றுக் கொண்டார்.

 2022 ஆம் ஆண்டில் FIA மோட்டார் பந்தய விளையாட்டில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். அதனூடாக ஃபோர்மியுலா பந்தயத்தில் பங்கேற்கும் தகைமையை பெற்றார்.

. ஃபோர்மியுலா 1 நோக்கிய இவரின் கவனம் அமைந்துள்ள நிலையில், இன்றைய மோட்டார் விளையாட்டு துறையில் காணப்படும் பிரகாசமான இளம் திறமைசாலிகள் வரிசையில் இவரும் அமைந்துள்ளமைக்கு அவரின் துரித வளர்ச்சி மற்றும் சாதனைகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் ஆடை துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...

2025-01-22 18:11:55
news-image

இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஹெக்ஸாவேர்...

2025-01-23 22:17:56
news-image

சுப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கல்

2025-01-22 15:31:41
news-image

SDB தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக...

2025-01-22 15:30:55
news-image

' கொமர்ஷல் வங்கி 'ஆண்டின் பசுமை...

2025-01-22 15:10:50
news-image

12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024...

2025-01-22 15:43:00
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரண்டு...

2025-01-22 15:10:26
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-22 15:42:44
news-image

LOLC பைனான்ஸ் வழங்கும் முதல் பிரெய்லி...

2025-01-22 15:09:09
news-image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து...

2025-01-22 13:46:35
news-image

MMCA இலங்கை ‘முழு நில அமைப்பு’...

2025-01-15 11:09:05
news-image

இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு விமான...

2025-01-12 09:58:53