ஒரு கோடி ரூபா பெறு­ம­தி­யு­டைய சட்டவிரோத போதைப் பொருளுடன் முந்தலம் - சின்னப்பாடு பிரதேசத்தில் வைத்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒரு கிலோவும் 50 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

39 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.