பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6 விக்கெட்கள் 67 ஓட்டங்களுக்கு சரிந்தன !

07 Dec, 2024 | 11:20 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும்   கடைசியமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 3ஆம் நாள் ஆட்டத்தில் பிடியைத் தளரவிட்டது.

தென் ஆபரிக்கா முதல் இன்னிங்ஸில் பெற்ற 358 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

ஆனால், போட்டியின் 3ஆம் நாளான இன்றைய தினம் இலங்கை தனது கடைசி 6 விக்கெட்களை வெறும் 67 ஓட்டங்களுக்கு இழந்து மொத்தமாக 328 மாத்திரம் பெற்றது.

இதன் பிரகாரம் முதல் இன்னிங்ஸ் நிறைவில் தென் ஆபிரிக்காவைவிட 30 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்த மெண்டிஸ் ஆகிய இருவரும்  3ஆம் நாளான இன்று  7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

மெத்யூஸ் 44 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 48 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

தொடர்ந்து தனஞ்சய டி சில்வா (14), குசல் மெண்டிஸ் (16), ப்ரபாத் ஜயசூரிய (24) ஆகியோர் பெரியளவில் பிரகாசிக்கவில்லை.

டேன் பெட்டர்சன் 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது விக்கெட்டில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கையைவிட 221 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.

டெம்பா பவுமாவும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 358 (கய்ல் வெரின் 105 ஆ.இ., ரெயான் ரிக்ல்டன் 101, டெம்பா பவுமா 76, லஹிரு குமார 79 - 4 விக்., அசித்த பெர்னாண்டோ 102 - 3 விக், விஷ்வா பெர்னாண்டோ 65 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 328 (பெத்தும் நிஸ்ஸன்க 89, கமிந்து மெண்டிஸ் 48, தினேஷ் சந்திமால் 44, ஏஞ்சலோ மெத்யூஸ் 44, டேன் பெட்டர்சன் 71 - 5 விக்.)

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 191 - 3 விக். (ஏய்டன் மார்க்ராம் 55, டெம்பா பவுமா 48 ஆ.இ., ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 36 ஆ.இ., ப்ரபாத் ஜயசூரிய 75 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08