சைவ மங்கையர் கழகமும் அதன் கீழ் இயங்கும் 5 நிறுவனங்களான சைவ மங்கையர் வித்தியாலயம், அதன் பழைய மாணவர் சங்கம், சைவ மங்கையர் இசை நடனக் கல்லூரி, மங்கையர் இல்லம் மற்றும் பாலாம்பிகை நமசிவாயம் இல்லம் இணைந்து நவம்பர் இறுதியில் ஏற்பட்ட ‘பெங்கல்’ சூறாவளி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவியுள்ளது.
இன்று (6) கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான புளியம்பொக்கணைக்குச் சென்று, அங்குள்ள 150 குடும்பங்களுக்கு 6500 ரூபா பெறுமதியான 8 கிலோ நிறையுடைய உலர் உணவுப்பொருட்களும் 5 கிலோ அரிசியும் அடங்கலான 150 நிவாரணப் பொதிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தக் கிராமத்தை அடையாளப்படுத்தி முன்னின்று உழைத்த சின்மயா மிஷன் சுவாமி பிரம்மசாரி ஷிவேந்திர சைதன்யாவின் வழிகாட்டலில் சைவ மங்கையர் கழகம் இந்த நிவாரண உதவியை வழங்கியுள்ளது.
இந்த சேவையை ஒழுங்குற நடத்துவதற்குத் துணை நின்ற கல்விப்பணிப்பாளர் தர்மரத்தினம், கிராம உத்தியோகத்தர் கௌரிசங்கர் மற்றும் சகோதரி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கு இதன்போது கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் கழகத்தலைவி மாலா சபாரத்தினம், உப தலைவி, இணைக்காரியதரிசி சரோஜினி கனேந்திரன், பொருளாலர் வாமனதேவி பாஸ்கரன், நிர்வாக சபை உறுப்பினர் இந்திராணி கனகசுந்தரம் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM