மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இலுப்பட்டிச்சேனை வயற்கண்ணத்தில் அமைந்துள்ள நல்லம்மா மடு எனும் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த அணைக்கட்டில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்தி நாம் இப்பகுதியில் 1,050 ஏக்கர் வயலில் வேளாண்மை செய்து வருகிறோம். இது தற்போது உடைபெடுத்துள்ளதனால் எமது வாழ்வாதாரமாக அமைந்துள்ள வேளாண்மைச் செய்கை முற்றாக பாதிப்புறும் நிலைமை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பெரிதும் சேதமடைந்துள்ள, விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்த அணைக்கட்டை விரைவில் புனர்நிர்மானம் செய்துதர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, நீர்ப்பாசனம் செய்யப்படுகிற துருசுகளையும் திருத்தியமைத்து தருமாறும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM