அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் 270 மில்லியன் அமெரிக்க டொலரை செலவழித்துள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டிம் மெலன் என்பவர் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியிருந்தார். தற்போது டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார நிதிக்கு எலான் மஸ்க் 270 மில்லியன் டொலர் நிதியை வழங்கி, அதிக நிதி வழங்கிய தனி நபர் என்பதில் முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க பிஏசி (America PAC) என்ற அரசியல் நடவடிக்கைக் குழு டிரம்புக்கு ஆதரவாக நிதி சேகரித்தது. இதற்கு எலான் மஸ்க் 238 மில்லியன் டொலரை வழங்கியுள்ளார்.
தேர்தல் காலத்தில் கருத்தடை தொடர்பான பிரச்சாரத்தை டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்தார். இது தொர்பான விளம்பரத்துக்கு உதவும் வகையில் 20 மில்லியன் டொலரை எலான் மஸ்க் மேலதிக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற நிலையில், அமெரிக்காவின் முக்கிய துறையான திறன் துறைக்கு எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை தலைவராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM