மக்களின் தேவை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கே ஓய்வேயில்லாமல் தொடர்ந்து உழைத்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் வாழ்க்கையில் கனவு காணவோ அல்லது ஒன்றின் மீது விருப்பம் கொள்ளவோ முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.
ஏனெனில் குறைந்தபட்ச ஆசைகள் கூட பலருக்கும் பல தருணங்களிலும் நிறைவேறுவதே இல்லை. இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நீங்கள் விரும்பியதை விரும்பிய வண்ணம் தருவதற்கு கேளக்கிய சித்தர் தயாராக இருக்கிறார் என சொல்கிறார்கள்.
உடனே எம்மில் பலரும் ..' சித்தர் வழிபாடா..! அது கடினமான வழிமுறையாக இருக்குமே..! ' என தயக்கம் காட்டுவர். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய முறையிலான வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
திருமணத்தடை - வேலை வாய்ப்பு - புத்திர பாக்கிய தடை - வியாபாரத்தில் நஷ்டம் - நீதிமன்ற வழக்கு - நாட்பட்ட நோய் பாதிப்பு - உயர்கல்வி கற்பதில் தடை - தொழிலில் தடை- என நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு, மகிழ்ச்சிக்கும் தேவையான அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து.. உங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்கான வரத்தை தருவதற்கு கேளக்கிய சித்தர் தயாராக இருக்கிறார்.
அவரை நீங்கள் வசப்படுத்துவதற்கு உங்களை தகுதி படுத்திக் கொண்டால் போதுமானது. அவரை நீங்கள் ஒருமுக மனதுடன் அழைத்தால்.. வருவதுடன் விரும்பும் வரத்தையும் அளிப்பதுடன் கேட்கும் எல்லா விடயங்களையும் அள்ளி அள்ளி தருவார்.
கேளக்கிய சித்தரை வழிபடுவதற்கு தேவையான பொருட்கள் : ஒரு கோப்பை குடிநீர்- ஒரு நெய் தீபம்..
நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அல்லது நீங்கள் எந்த கிழமையில் பிறந்திருந்தாலும் அந்த நட்சத்திரம் மற்றும் அந்த கிழமையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தம் என குறிப்பிடப்படும் 3:36 முதல் சூரிய உதயத்திற்கு முன் வரை ஏதேனும் அரை மணி தியாலத்தை தெரிவு செய்ய வேண்டும்.
பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு முன்பாக படுக்கையில் இருந்து எழுந்து பல் துலக்கி, நீராடி, தூய்மையான உடையுடன் உங்களது பூஜை அறையில் அமருங்கள். உங்கள் முன் ஒரு கோப்பை குடி நீரை வைத்துக் கொள்ளுங்கள். அருகில் ஒரு நெய் தீபத்தையும் ஏற்றுங்கள்.
இதன் பிறகு உங்களது மனதை சாந்தப்படுத்தி.. ஒருமுகப்படுத்தி .. 'ஓம் கேளக்கிய சித்தரே நமஹ' எனும் மந்திரத்தை சீரான லயத்துடன் தொடர்ந்து 1008 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் முன் இருக்கும் ஒரு கோப்பை நீரை அருந்துங்கள். நெய் தீபத்தை அதுவாக அணையும் வரை காத்திருங்கள்.
இந்த நாளாந்த வழிபாட்டினை தொடர்ச்சியாக ஏழு நாட்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த ஏழு நாட்களிலும் உங்களுடைய பிரார்த்தனை ஒரே கோரிக்கையாக ... ஒற்றைக் கோரிக்கையாக இருக்குமாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டினை நீங்கள் நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் போது உங்களது கோரிக்கை அல்லது நீங்கள் கேட்ட விடயம் சாத்தியமாவதை அதாவது நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
எளிய வழிபாட்டின் மூலம் கேளக்கிய சித்தரை வழிபட்டு, உங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தால் அவர் நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார்.
ஓம் கேளக்கிய சித்தரே நமஹ!!.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM