'அயோத்தி', 'கருடன்', 'நந்தன்' என தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக மீண்டும் உயர்ந்திருக்கும் சசிகுமார் கதையின் நாயகனாக.. ஈழத் தமிழராக.. நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை மற்றும் கிளர்வோட்டம் பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ், அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்-மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்ற பார்வை மற்றும் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் ஈழத்தமிழில் உரையாடும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM