'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ் குமார் வெளியிட்ட 'குழந்தைகள் முன்னேற்ற கழகம் ' எனும் திரைப்படத்தின் முதல் பாடல்

07 Dec, 2024 | 05:18 PM
image

முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' எனும் திரைப்படத்தில் இடம் பிடித்த 'பாலிடிக்ஸ் தெரியலன்னா பூமரு.. 'எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'இசை அசுரன்' ஜீ .வி. பிரகாஷ் குமார் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

கார்த்திக் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'சகுனி' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் என். சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' எனும் திரைப்படத்தில் யோகி பாபு, செந்தில், இமயவரம்பன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, பவாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெ.  லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'சாதக பறவைகள்' சங்கர் இசையமைத்திருக்கிறார். 

குழந்தைகளின் அரசியலை மையப்படுத்தி கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் என். சங்கர் தயாள் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'பாலிடிக்ஸ் தெரியலன்னா பூமரு.. 'எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தப் பாடலை பாடலாசிரியர் என். சங்கர் தயாள் எழுத, பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். குழந்தைகளுக்கான ரைமிங்ஸ் மெட்டில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வளரிளம் பருவ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22
news-image

புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும்...

2025-01-23 15:03:08
news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25