'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும் 'ஃபயர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

07 Dec, 2024 | 05:20 PM
image

'பிக் பொஸ்' புகழ் நடிகர் பாலாஜி முருகதாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஃபயர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

தயாரிப்பாளரும், நடிகருமான ஜெ. எஸ். கே. சதீஷ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஃபயர்' எனும் திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரட்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம் புலி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜெ. எஸ். கே. சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜீ. சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி கே இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஜெ எஸ் கே ஃபிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெ. எஸ். கே. சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி சிறப்பித்தனர். 

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்ற காட்சிகள்  விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருப்பதால்... முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. மேலும் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22
news-image

புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும்...

2025-01-23 15:03:08
news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25