நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர் ' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

07 Dec, 2024 | 05:19 PM
image

'கன்னி மாடம்' எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக- காதல் இளவரசனாக -நடித்திருக்கும் ' மெசன்ஜர் ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' வானமே இல்லா பறவையாய்...' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

அறிமுக இயக்குநர் ரமேஷ் இலங்காமணி இயக்கத்தில் உருவாகி வரும் ' மெஸன்ஜர் 'எனும் திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஜெஷ்னானி, பாத்திமா நஹும், லிவிங்ஸ்டன், ஜீவா ரவி, இட்'ஸ் பிரசாந்த்,  கூல் சுரேஷ் ,பிரியதர்ஷினி ராஜ்குமார்,  வைஷாலி ரவிச்சந்திரன், யமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். பால கணேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். அபூபக்கர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை பி வி கே  ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. விஜயன் தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற 'வானமே இல்லா பறவையாய்..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ஈ. தக்ஷன் எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெல்லிசையும் காதலும் கலந்த இந்தப் பாடல் இளம் தலைமுறை  ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22
news-image

புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும்...

2025-01-23 15:03:08
news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25