(நெவில் அன்தனி)
வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கஸ் அட்கிட்சன் பதிவுசெய்த ஹெட்-ட்ரிக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தெல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இங்கிலாந்து மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து, போட்டியில் மேலும் 3 நாட்கள் மீதம் இருக்க 533 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இங்கிலாந்தின் கடைசி 5 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.
நியூஸிலாந்து சார்பாக கேன் வில்லியம்சன் மாத்திரமே ஒரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 37 ஓட்டங்களைப் பெற்றார்.
நியூஸிலாந்தின் கடைசி மூவரான நேதன் ஸ்மித், மெட் ஹென்றி, டிம் சௌதீ ஆகியோரை ஹெட் - ட்ரிக் முறையில் ஆட்டம் இழக்கச் செய்த கஸ் அட்கின்சன் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ப்றைடன் கார்ஸ் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 155 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து, 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்ப வீரர் ஸக் க்ரோவ்லி 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த போதிலும் அடுத்த நால்வர் அரைச் சதங்கள் குவித்து இங்கிலாந்தை பலமான நிலையில் இட்டனர்.
பென் டக்கெட் 92 ஓட்டங்களையும் ஜேக்கப் பெத்தெல் 96 ஓட்டங்களையும் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் 187 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவர்கள் இருவரும் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (211 - 3 விக்.)
அதன் பின்னர் ஜோ ரூட் (73 ஆ.இ.), ஹெரி ப்றூக் (55) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மத்திய வரிசையில் ஒல்லி போப் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜோ ரூட், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (35 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
பந்துவீச்சில் டிம் சௌதீ 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 76 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM