(எம்.மனோசித்ரா)
ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார செழிப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமையளித்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்க திறைசேரியின் உதவி செயலாளர் ரொபர்ட் காப்ரோத், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (6) மாலை இடம்பெற்றது.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே ஜூலி சங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது சமகால இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிறுவனத்தின் ஆசியப் பணியகத்துக்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ், டொனால்ட் லூவின் பணிக்குழாம் பிரதானி விர்சா பெர்கின்ஸ் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், அஜித் பீ பெரேரா, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்த்தன மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM