புதுப்பொலிவு பெறும் இணையத்தளத்துடன் செயற்பாட்டுக்கு வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் FlySmiLes

07 Dec, 2024 | 01:33 PM
image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தொடர் பயணியர் திட்டமான FlySmiLes, அதன் சுமார் 800,000 உலகளாவிய உறுப்பினர்களுக்கான பல உள்ளுணர்வு சார்ந்த செயற்பாடுகளுடன் தடையற்ற அணுகல் மற்றும் வெகுமதி மீட்புகளை வழங்கும், பல தனித்துவமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதுப்பொலிவு பெறும் இணையத்தளத்துடன் செயற்பாட்டுக்கு வந்துள்ளது.

FlySmiLes  உறுப்பினர்களுக்கு அவர்களின் பயணங்கள் ஊடாகவும் அதனைத் தாண்டியும் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், விதிவிலக்கான எளிமை மற்றும் சிறப்புரிமைகளைக் கொண்டுவரும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோக பிரிவுத் தலைவரான திமுத்து தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த புதிய FlySmiLes' இணையத்தளமானது சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுடன் நாங்கள் எவ்வாறு எமது தொடர்புகளைப் பேணுகிறோம் மற்றும் வெகுமதி அளிக்கிறோம் என்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

அதன் மேம்படுத்தப்பட்ட, பயனர் நட்பு அம்சங்களுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பிரத்தியேக வெகுமதிகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை அணுக உறுப்பினர்களுக்கு இந்த இணையதளம் வாய்ப்பளிக்கிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தகவல் தொழில்நுட்ப குழுமத் தலைவர் சாமர பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “முற்றிலும் ஸ்ரீலங்கன் ஊழியர்களால் உருவாக்கம் செய்யப்பட்ட இந்த செயற்திட்டம் எமது விமானச் சேவையில் உள்ள குறிப்பிடத்தக்கத் திறமை மற்றும் புத்தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. எங்கள் குழுக்களின் கூட்டு முயற்சிகள்,இணையதளத்தின் அனைத்து விவரங்கள் மற்றும் அம்சங்கள் எங்கள் தொடர் பயணிகளின் குறிப்பான தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. 

அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த இணையத்தளமானது நடைமுறை மற்றும் அழகியல் ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையை பேணுவதுடன் ;,

FlySmiLes திட்டத்திற்கான ஒரு விரிவான டிஜிட்டல் முகப்பாக செயற்பட்டு, பெரும்பாலும்  ஒவ்வொரு உறுப்பினர் தேவைகளுக்கும் தீர்வுகளை வழங்குகிறது.

உறுப்பினர்கள் இப்போது தங்கள் தனிப்பயனாக்கப்பட்ட டாஷ்போர்டை சிரமமின்றி செயற்படுத்தி, அவர்களின் FlySmiLes பயண மைல் மிகுதியைச் சரிபார்த்து, அவர்களின் உறுப்பினர் நிலை முன்னேற்றத்தைக் கண்காணிக்கலாம். 

மேலும், பயண மைல்களை வாங்குவது, மாற்றுவது மற்றும் பரிசளிப்பது ஒருபோதும் கடினமாக இருக்காது. இந்த தளமானது சமூக வலைத்தள உள்நுழைவுடன்  (login) தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்குகிறது, உறுப்பினர்கள் தங்கள் Google அல்லது Facebook கணக்குகளைப் பயன்படுத்தி உள்நுழைய (sign in) இது உதவுகிறது. 

மேலதிக பாதுகாப்பிற்காக, பரிவர்த்தனைகளுக்கு OTP (ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) இயக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விசா மற்றும் மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட பல்வேறு கட்டண தெரிவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில கிளிக்குகளில் கோரிக்கைகளை முன்வைத்தல், வெகுமதிப் புள்ளிகளை மீட்பது, மாற்றுவது அல்லது இரத்து செய்வது போன்றவற்றைச் செய்வதன் மூலம், வெகுமதி புள்ளி மீட்பு வவுச்சர்களை (redemption vouchers) நிர்வகிப்பதை இந்த இணையதளம் எளிதாக்குகிறது.

பிரதான சின்னத்தையுடைய கார்ட்தாரர்களுக்கான ஓய்வறை அணுகல் வவுச்சர்கள் (lounge access vouchers), அதிகப்படியான பொதி வவுச்சர்கள் (excess baggage vouchers) மற்றும் விமான சேவை அல்லாத பங்காளர்களின் வவுச்சர்கள் போன்ற பல்வேறு வகையான வவுச்சர்களுக்கான எளிதான அணுகலையும் இது வழங்குகிறது. 

FlySmiLes ஆனது பிளாட்டினம், கோல்ட், கிளாசிக் மற்றும் புளு உறுப்பினர் நிலைகளை வழங்கும், அதே நேரத்தில் சில்வர் உறுப்பினர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இணைச் சின்ன கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கிறது. 

Oneworld® விமானக் கூட்டணியின் உறுப்பினர் என்ற வகையில், FlySmiLes ஆனது, தொடர் சர்வதேச பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக உலகின் முன்னணி விமான நிறுவனங்களின் உயரடுக்கு குழுவின் ஒரு பகுதியாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 600 க்கும் மேற்பட்ட ஓய்வறைகளுக்கான அணுகல் உட்பட, உறுப்பினர்கள் சிறப்பு சலுகைகள் மற்றும் வெகுமதிகளை அனுபவிக்க முடியும். 

உறுப்பினர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஒன்வேர்ல்ட் உறுப்பினர் ஏர்லைன்ஸ், ஒன்வேர்ல்ட் இணைந்த ஏர்லைன்ஸ் அல்லது ஏதேனும் பங்காளர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றில் பயணம் செய்யும் போதெல்லாம் FlySmiLes மைல்களை சம்பாதிக்கலாம் மற்றும் மீட்டெடுக்கலாம். மேலும் தகவலுக்கு, http://www.flysmiles.com/flysmiles/home என்ற புதிய இணையதளத்தைப் பார்க்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் ஆடை துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...

2025-01-22 18:11:55
news-image

இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஹெக்ஸாவேர்...

2025-01-23 22:17:56
news-image

சுப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கல்

2025-01-22 15:31:41
news-image

SDB தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக...

2025-01-22 15:30:55
news-image

' கொமர்ஷல் வங்கி 'ஆண்டின் பசுமை...

2025-01-22 15:10:50
news-image

12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024...

2025-01-22 15:43:00
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரண்டு...

2025-01-22 15:10:26
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-22 15:42:44
news-image

LOLC பைனான்ஸ் வழங்கும் முதல் பிரெய்லி...

2025-01-22 15:09:09
news-image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து...

2025-01-22 13:46:35
news-image

MMCA இலங்கை ‘முழு நில அமைப்பு’...

2025-01-15 11:09:05
news-image

இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு விமான...

2025-01-12 09:58:53