சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது பேசிய ரஜினிகாந்த் விரைவில் தமிழக அரசியல் பிரவேசிக்க இருப்பதை சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நெருக்கமான சில மூத்த அரசியல்வாதி நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது, தலைவர் தற்போது நடித்து வரும் எந்திரன் 2 படமும், இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திலும் மட்டும் தான் நடிக்கவிருக்கிறாராம். அதன்பின் நடிக்கபோவதில்லையாம். தீவிர அரசியலில் ஈடுபடவிருக்கிறாராம். 

அப்படியென்றால் பா ரஞ்சித் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் நடிக்கவிருக்கும் படம் தான் அவரின் கடைசிப் படமாக இருக்கும் என்று தெரியவருகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்