பணத் தகராறு ; பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; இளைஞன் கைது

07 Dec, 2024 | 10:32 AM
image

குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல , தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார். 

சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்டவர் இளைஞன் ஒருவருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபரான இளைஞன் கொலை செய்யப்பட்டவரை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். 

இதனையடுத்து, சந்தேக நபரான 30 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03
news-image

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும்...

2025-06-24 10:45:42
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள...

2025-06-24 10:40:53
news-image

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக...

2025-06-24 10:27:52
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-06-24 10:19:44
news-image

யாழில் வீசிய பலத்த காற்றினால் 159...

2025-06-24 10:15:06
news-image

இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித...

2025-06-24 10:33:12
news-image

யாழ். திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி...

2025-06-24 10:00:59