(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிஸபெத், சென். ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் மிகுந்த பொறுப்புணர்வுடன் துடுபெடுத்தாடிக்கொண்டிருந்தது.
பெத்தும் நிஸ்ஸன்க, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ் ஆகிய அனைவரும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை சிறப்பான நிலையில் இட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் பெற்ற 358 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 3 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 116 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது.
மொத்த எண்ணிக்கை 41 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த பெத்தும் நிஸ்ஸன்கவும் தினேஷ் சந்திமாலும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.
தினேஷ் சந்திமால் 97 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகளுடன் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 49 ஓட்டங்களை பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்தார்.
157 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 89 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார். (199 - 3 விக்.)
தனது 15 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெத்தும் நிஸ்ஸன்க பெற்ற 7ஆவது டெஸ்ட் அரைச் சதம் இதுவாகும்.
பெத்தும் ஆட்டம் இழந்த பின்னர் ஏஞ்சலோ மெத்யூஸும் கமிந்து மெண்டிஸும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஏஞ்சலோ மெத்யூஸ் 40 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் கெகிசோ ரபாடா, டேன் பெட்டர்சன், கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு சிம்மசொப்பனமாக இருந்த மாக்கோ ஜென்சன் 75 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, அதே மொத்த எண்ணிக்கையில் கேஷவ் மஹாராஜை (0) இழந்தது.
ஆனால், மத்திய வரிசையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கய்ல் வெரின் அபார சதம் குவித்ததுடன் கெகிசோ ரபடாவுடன் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 56 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ரபாடா 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து டேல் பெட்டசன் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
கய்ல் வெரின் 133 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் லஹிரு குமார 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM