(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று ஆரம்மான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மிச்செல் ஸ்டாக்கின் அற்புதமான பந்துவீச்சில் இந்தியா நிலைகுலைந்துபோனது.
இளஞ்சிவப்பு நிற பந்தைக் கொண்டு பகல் இரவுப் போட்டியாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெத்தாடத் தீர்மானித்த இந்தியா, முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நிட்டிஷ் குமார் ரெட்டி (42), கே.எல். ராகுல் (37), ஷுப்மான் கில் (31), ரவிச்சந்திரன் அஷ்வின் (22), ரிஷாப் பான்ட் (21) ஆகிய ஐவர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
சிரேஷ்ட வீரர்களான விராத் கோஹ்லி (7), ரோஹித் ஷர்மா (3) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலளித்து துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
உஸ்மான் கவாஜா 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
நேதன் மெக்ஸ்வீனி 38 ஓட்டங்களுடனும் மானுஸ் லபுஸ்ஷேன் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 13 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்ந்த ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM