கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது ஐந்து பிள்ளைகளின்  தந்தை பலியானதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில்  இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி  படுகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிசைப்பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது, தாம் வாடகைக்கு நடத்திய வியாபார நிலையத்திற்கு வழங்கி முற்பணத்தை மீளப்பெற்றுகொள்வதற்காக கணவன், மனைவி மற்றும் அவர்களது ஆறு வயது மகள் ஆகியோர் கடை உரிமையாளரிடம் சென்ற போது ஏற்பட்ட தர்க்கத்தின்போது கடை உரிமையாளரினால் கணவன்  மனைவி ஆகிய இருவரும் கத்தியினால் குத்தப்பட்டுள்ளனர்.  என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.  

குத்தியவர் எனும் சந்தேகத்தில் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.