(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவும் பங்களாதேஷும் தகுதிபெற்றன.
ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஓர் அரை இறுதிப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்களால் இந்தியாவும், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்களால் பங்களாதேஷும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.
இந்தியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை இளையோர் அணி 8 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது 3 விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.
இந் நிலையில் ஜோடி சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர். ஆனால், அது போதுமானதாக அமையவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் பிரகாசிக்கவில்லை.
லக்வின் 69 ஓட்டங்களையும் சண்முகநாதன் ஷாருஜன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சேத்தன் ஷர்மா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 21.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ராஜஸ்தான் றோயல்ஸினால் ஐபிஎல் ஏலத்தில் 1.1 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்ட 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷி 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார்.
பங்களாதேஷ் வெற்றி
பங்களாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டியில் மிகவும் இலகுவாக 7 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.
ஏ குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பாகிஸ்தான் வெற்றிபெறும் என எதிர்பாரக்கப்பட்டது.
ஆனால், மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 22.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இறுதிப் போட்டி துபாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM