(நெவில் அன்தனி)
ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) தலைவர் பதவியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் பேரவையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக ஷம்மி சில்வா பல வருடங்கள் பணியாற்றியதால் சிறந்த அனுவத்துடன் இப் பதவியை பொறுப்பேற்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக ஆசிய கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமைப் பதவியை ஏற்றதும் தனது நன்றியைத் தெரிவித்து பேசிய ஷம்மி சில்வா, 'ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியை ஏற்று அதனை வழிநடத்துவது பெருமைக்குரிய விடயமாகும். ஆசியாவின் இதயத் துடிப்பு கிரிக்கெட் விளையாட்டாகும். இவ் விளையாட்டை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் திறமைசாலிகளுக்கான வாய்ப்புகளை வழங்கவும், இந்த அழகிய விளையாட்டின் மூலம் எங்களை ஒன்றிணைக்கும் பிணைப்பை பலப்படுத்தவும் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன்' என்றார்.
பதவி விலகிச் செல்லும் ஜெய் ஷாவின் முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் அவரது பதவிக் காலத்தில் அவர் வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகியவற்றை பாராட்டிய ஷம்மி சில்வா, ஆசிய கிரிக்கெட் பேரவை சார்பாக ஜெய் ஷாவுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியையும் தெரிவித்தார்.
ஷாவின் தலைமையில் ஆசிய கிரிக்கெட் பேரவை குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியிருந்தது.
2024-31 கிரிக்கெட் பருவகாலத்தில் அரங்கேற்றப்படவுள்ள ஆசிய கிண்ண போட்டிகளுக்குரிய வணிக உரிமைகளுக்கான அதிகபட்ச மதிப்பை வெற்றிகரமாக பெற்றுக்கொடுத்த பெருமை ஷாவை சாருகிறது.
அத்துடன் புதிய நிகழ்ச்சி கட்டமைப்பு திட்டம், உறுப்பு நாடுகளில் கிரிக்கெட்டின் தொடர்ச்சியான அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி ஆகிய விடயங்களில் அவர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.
ஆசிய கிரிக்கெட்டில் மிக முக்கியமான தருணத்தில் தலைமைப் பொறுப்பை ஷம்மி சில்வா ஏற்றுள்ளார்.
ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பார் என்றும் வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளை உலக அரங்கில் சிறந்து விளங்கச் செய்வதற்கான ஆதரவை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM