தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி தீபாவளி திருநாளன்று வெளியான திரைப்படம் 'பிரதர்'. குடும்பம், சகோதர பாசம், சென்டிமென்ட், காதல் என முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக அமைந்த இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களும், வரவேற்பும் கிடைத்தது.
இருப்பினும் இந்த திரைப்படம் நவம்பர் மாத இறுதியில் ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.
டிஜிட்டல் தளத்தில் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நூறு மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து இப்படம் சாதனை படைத்து வருகிறது.
முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் படமாளிகையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அத்திரைப்படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற தவறுவதில்லை.
அந்த வகையில் தீபாவளி திருநாளன்று வெளியான ஜெயம் ரதியின் 'பிரதர் ' எனும் திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதியன்று முன்னணி டிஜிட்டல் தளமான ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.
ரசிகர்களின் குறிப்பாக குடும்ப ரசிகர்களின் பேராதரவு காரணமாக இந்த திரைப்படம் குறுகிய கால அவகாசத்திற்குள் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட நிமிடங்களால் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் எம் . ராஜேஷ் இயக்க, ஜெயம் ரவியுடன் பிரியங்கா அருள் மோகன், ராவ் ரமேஷ், வி டிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகி இப்படத்தில் இடம்பெற்ற : மக்கா மிஷி..' எனும் பாடல் டிஜிட்டல் தள பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM