இங்கிலாந்தை மீண்டும் மீட்டெடுத்த ப்றூக், போப்

06 Dec, 2024 | 02:53 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 280 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஹெரி ப்றூக் தொடர்ச்சியாக குவித்த இரண்டாவது சதம், ஒலி போப் பெற்ற அரைச் சதம் என்பன இங்கிலாந்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டு நல்ல நிலையில் இட்டன.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் இங்கிலாந்தின் முதல் நான்கு விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்த்தப்பட்டன.

அந்த டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தனர்.

முதலாவது போட்டியில் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 141 ஓட்டங்ளைப் பகிர்ந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டியில் 174 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த ஹெரி  ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 217 ஓட்டங்களாக உயர்த்தினர்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்களைக் குவித்த ஹெரி  ப்றூக் இந்தப் போட்டியில் 123 ஓட்டங்களைப் பெற்றர்.

அப் போட்டியில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப், இப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரை விட வெறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் நேதன் ஸ்மித் 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார்.

ப்றைடன் கார்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16