அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டியில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் 5 தேசிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற அரச விருது வழங்கும் விழாவின்போது அவர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நாடகப் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியானது இளைஞர்களின் ஆன்மிக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நாடக செயற்பாடுகளால் பயனுடைய செழிப்பான எதிர்கால பிரஜைகளை உருவாக்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
பொன்னையா சுரேந்திரன் என்பவரால் நெறியாள்கை செய்யப்பட்ட ‘மீளநினை’ எனும் சிறுவர் நாடகமானது மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்று, தேசிய மட்டப் போட்டியானது 9.10.2024 அன்று டவர் அரங்க மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது.
இந்நிலையில், விருது வழங்கும் விழாவில் சிறந்த தயாரிப்பு, சிறந்த நெறியாள்கை, சிறந்த நடிகன், சிறந்த நடிகை, சிறந்த ஒளியமைப்பு உட்பட 5 தேசிய விருதுகளை கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM