இந்திய - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இளஞ்சிவப்பு நிற டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

06 Dec, 2024 | 09:22 AM
image

(நெவில் அன்தனி)

தனது சொந்த மண்ணில் நியூஸிலாந்திடம் 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் மிகவும் அவமானகரமான தோல்விக்குப் பின்னர், போர்டர் - காவஸ்கர் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு இந்தியா அச்சுறுத்தலாக இருக்கும் என  கருதப்படவில்லை.

அத்துடன் அவுஸ்ரேலியாவுடனான தொடரில் இந்தியா தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கலாம் என்ற கருத்தும் நிலவியது.

ஆனால், பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பதில் அணித் தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ராவின் வழிநடத்தலில் வரவேற்பு நாடான அவுஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்தியா 295 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்தியாவின் இந்த வெற்றியைத் தொடர்ந்து உள்ளூர் ஊடகங்கள் அவுஸ்திரேலியாவின் தோல்வியை கடுமையாக விமர்சித்த வண்ணம் இருந்தன.

அதேவேளை, மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக தொடர் வெற்றியை சுவீகரிக்கக்கூடிய நல்ல நிலையில் இந்தியா இருக்கிறது.

இந் நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.

பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் முன்வரிசை முற்றுமுழுதாக பிரகாசிக்கத் தவறியது. உஸ்மான் கவாஜா, லபுஷேன், முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் உட்பட சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் சோடை போயினர். அத்துடன் அண்மைக்காலப் போட்டிகளில் அவர்களது துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

முதலாவது   போட்டியில் மிகத் திறமையாகப் பந்துவீசி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய பும்ரா, இரண்டாவது டெஸ்டில் இளம்சிவப்பு நிற பந்தை வீசும்போது அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.

எவ்வாறாயினும் பகல் - இரவு டெஸ்ட் போட்டி விளையாட ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பகல் இரவுப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததில்லை. இது ஏதோ ஒருவகையில் வரவேற்பு நாடான அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் என்பது உறுதி. மேலும் முதல் போட்டியில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா மீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2020இல் இளஞ்சிவப்பு நிற பந்து டெஸ்ட் போட்டியில் சந்தித்தபோது 2ஆவது இன்னிங்ஸில் 36 ஓட்டங்களுக்க இந்தியா சுருண்டதுடன் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அந்த வெற்றியில் பங்கெடுத்த சில சிரேஷ்ட வீரர்கள் இப்போதும் அணியில் இடம்பெறுவது அவுஸ்திரேலியாவுக்கு வரப்பிரசாதமாக அமையுவுள்ளது.

இதேவேளை, இந்திய அணியில் தற்போது இடம்பெறும் பலருக்கு இளஞ்சிவப்பு பந்தில் விளையாடிய அனுபவம் இல்லை. எனவே, அவர்கள் இந்தப் பந்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை எந்தளவு பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் போட்டியின்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

பொதுவாக இளஞ்சிவப்பு பந்து மிகவேகமாக துடுப்பை வந்தடைவதால் இரண்டு அணிகளினதும் வீரர்கள் சிறந்த நுட்பத்திறனுடன் பந்தை எதிர்கொள்வது அவசியம் என கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா ஏற்கனவே 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருப்பதுடன் இந்த டெஸ்டிலும் வெற்றிபெற்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மூன்றாவது நேரடித் தடவையாக விளையாடுவதை உறுதிசெய்ய முயற்சிக்கும்.

அதேவேளை, தொடரில் மீண்டு வரும் நோக்கத்துடனும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் குறிக்கோளுடனும் அவுஸ்திரேலியா இப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாகவும் இரசிகர்களுக்கு பெருவிருந்தாகவும் அமையும் என நம்பப்படுகிறது.

அணிகளில் மாற்றங்கள்

இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் இடம்பெறவுள்ளது.

வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியுள்ளதுடன் அவர் மத்திய வரிசையில் பெரும்பாலும் 5ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு த்ருவ் ஜுடெல் இடம் விடுகிறார்.

அத்துடன் தேவ்தத் படிக்கல்லுக்குப் பதிலாக ஷுப்மான் கில்லும், வொஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினும் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை  காயம் அடைந்துள்ள வேகபந்துவீச்சாளர் ஜொஷ் ஹேஸ்ல்வூடுக்குப் பதிலாக அவுஸ்திரேலிய அணியில் ஸ்கொட் போலண்ட் விளையாடவுள்ளார்.

அணிகள்

இந்தியா: யஷஸ்வி ஜய்ஸ்வால், கே.எல. ராகுல், ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா (தலைவர்), ரிஷாப் பான்ட், நிட்டிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷித் ராணா, மொஹமத் சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா

அவுஸ்திரேலியா: நேதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னுஸ் லபுஷேன்,ன ஸ்டீவ் ஸ்மித், டிரவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்கொட் போலண்ட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34