கிணற்றில் வீழ்ந்த பென்சிலை எடுக்க  இறங்கிய மூன்றரை வயது குழந்தை மரணம்!

Published By: Vishnu

05 Dec, 2024 | 08:29 PM
image

கிணற்றில் வீழ்ந்த பென்சிலை எடுக்க இறங்கிய மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவம் பருத்தித்துறை - திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் 05 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. இதில் ரஜீவன் சுஜீ என்கின்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தை தனது கையில் பென்சில் ஒன்றுடன் சென்றுகொண்டிருந்தபோது பென்சில் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளது.

அதனை எடுப்பதற்காக குறித்த கிணற்றில் இறங்கிய வேளை குழந்தை நீரில் மூழ்கியது. குழந்தையை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05