அநுராதபுரம், நாச்சந்துவ பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட சிராவஸ்திபுர, மொரகொட, பஹே எல, கல்வடுவாகம, கொடிகல மற்றும் வதாகட ஆகிய கிராமங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உள்நுழைவதால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த காட்டு யானை கூட்டம் நேற்று புதன்கிழமை (4) காலை சிராவஸ்திபுர பிரதேசத்தில் உள்ள பெருமளவிலான பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.
இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில் ,
இந்த காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதால் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த கிராமங்களில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தாலும்,இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வேலிகளை அமைத்து விரைவில் காப்பு கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM