மதுபானசாலை அனுமதிப்பத்திரத்துக்கு பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்தவும் ; ராேஹித்த அரசாங்கத்திடம் கோரிக்கை

05 Dec, 2024 | 06:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பெயர்கள் மற்றும் அதற்கு பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்து என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தி்ல் வியாழக்கிழமை (05) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தினால் 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கிய பெயர் பட்டியலை சபைக்கு சமர்ப்பித்திருந்தமை குறித்து நன்றி செலுத்துகிறேன். 

நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற களுத்துறை மாவட்டத்துக்கு 6க்கும் அதிகமாக இந்த புதிய மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதனால் இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டவர் யார் என்பதுடன் அந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளோ அமைச்சர்களோ அல்லது வேறுயாரேனும் பரிந்துரை செய்திருந்தால் அவர்களின் பெயர்களையும் வெளிப்படுத்த வேண்டும். 

அனைத்தையும் வெளிப்படுத்த முடியாவிட்டாலும் களுத்துறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களுக்கு பரிந்துரை செய்தவர்களின் பெயர்களையாவது வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கிய பாவத்தில் பங்குகாெள்ள அனைவரும் விருப்பம் இல்லை. அதனால் மிகவிரைவாக இந்த பெயர் பட்டியலை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதற்கு ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளிக்கையில், பதுபானசாலை அனுமதிப்பதிரம் வழங்கியமை தொடர்பில் நிதி அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

விசாரணை முடிவடைந்தபின்னர் அது தொடர்பான விடயங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24