சமூக நலத்திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் இலங்கை சோனக பெண்கள் ஒன்றியத்தினால் வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படும் விற்பனை நிகழ்வு இம்முறை எதிர்வரும் சனிக்கிழமை (07) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலக்கம் 8, பலபொக்குன வீதி, கொழும்பு 06 என்ற விலாசத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவிருக்கும் இவ்விற்பனை நிகழ்வில் உணவு, குளிர்பானம், ஆடைகள், அணிகலன்கள், தாவரங்கள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டுத் தேவைக்கான பொருட்கள், காலணிகள், அலங்காரப் பொருட்கள் என சகல பொருட்களையும் உள்ளடக்கிய 30க்கும் மேற்பட்ட விற்பனைகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நலிவுற்ற பெண்கள் மற்றும் சிறுவர்களின் தேவைகளை அடையாளம் கண்டு பூர்த்தி செய்யும் நோக்கில் 1936ஆம் ஆண்டு 11 முஸ்லிம் பெண்கள் இணைந்து உருவாக்கிய இலங்கை சோனக பெண்கள் ஒன்றியமானது கடந்த காலங்களில் நாட்டிலுள்ள நலிவுற்ற பெண்களுக்கு உதவும் நோக்கிலான பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM