இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இளைஞர்களை வலுவூட்டுவதில் 20 வருட நிறைவை கொண்டாடியுள்ளது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆங்கில மொழித் திறன்கள், தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து 1300க்கும் அதிகமான இலங்கை இளைஞர்களை வலுவூட்டியுள்ள மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியொன்றான ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த வருடம் கொண்டாடியுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகளாவிய ரீதியில் 2004ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறன்களில் வலுவான அடித்தளமொன்றை வழங்குகிறது.
அதன் இரண்டு வருடம் முழுவதுமான இலவச 360 மணிநேர பாடத்திட்டத்தின் ஊடாக இலங்கை இளைஞர்கள் தலைமைத்துவ பயிற்சி, தொழில்சார் அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் அமெரிக்க கலாசார மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்ட அனுபவங்களானது சிறந்த கல்வி மற்றும் தொழில்சார் வாய்ப்புகளுக்கான கதவுகளை திறப்பதுடன், எதிர்காலத்தில் அமெரிக்காவிலான பரிமாற்ற மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு போட்டியிடுவதற்கும் மாணவர்களை தயார் செய்கிறது.
'இலங்கையில் ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதானது, கல்வியின் மூலம் இளைஞர்களை வலுவூட்டுவதிலான எமது நீடித்த உறுதிப்பாட்டுக்கு சான்று பகிர்வதாக அமைந்துள்ளது' என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
'இந்த நிகழ்ச்சித்திட்டமானது அத்தியாவசியமான ஆங்கில மொழி திறன்களை வழங்குவதுடன் மட்டுமல்லாது, தலைமைத்துவம், தொழில்சார் அபிவிருத்தி மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஊக்குவிக்கிறது.
சமூகங்களுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியும் நாம் பிரகாசமானதும் அனைவரையும் மேலும் உள்வாங்கிய எதிர்காலமொன்றிலும் நாம் முதலீடு செய்து கொண்டிருக்கிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது வெறுமனே மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாது, அது இலங்கயில் ஆங்கில மொழி கற்பித்தலை வலுப்படுத்துவதுடன், மாணவர்களை உலகளாவிய அணுகல் வலையமைப்பிற்கும் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்துமான சகாக்களுடனும் இணைக்கிறது.
இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆசிரியர்கள் உயர்தரத்திலான பயிற்சிகளை பெறுவதுடன், தேசிய மற்றும் பிராந்திய மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளுடன் உலகளாவிய பயிற்சி சமூகமொன்றுடனும் இணைந்துகொள்கின்றனர்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 34 இலங்கை கல்வியியலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் மாணவ சமூகத்தினர் நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற 20ஆவது ஆண்டு நிறைறையொட்டிய பிராந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர்.
'நாம் எவ்வாறு கல்வி ரீதியான வாய்ப்புகளை விஸ்தரிக்கிறோம் மற்றும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் எவ்வாறு வலுவான உறவுகளை கட்டியெழுப்புகிறோம் என்பதில் இந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது முக்கியமான அங்கமொன்றாக அமைந்திருக்கிறது' என்று அமெரிக்க தூதரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி ஹய்டி ஹட்டன்பேக் தெரிவித்தார்.
'மோதல்களுக்கு பின்னர் மீட்சி அடைந்துவரும் நாடொன்றில் இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது ஆங்கிலம் கற்பித்தலுக்கு மேலதிகமாக பல விடயங்களை செய்துள்ளது. அது வேறுபட்ட பின்னணிகளிலிருந்தான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றுபடுத்துவதுடன், அவர்களை உலகளாவிய வலையமைப்பொன்றுக்கும் இணைக்கிறது.
அதுமட்டுமல்லாது, சமூகங்கள் முழுவதும் புரிந்துணர்வு மற்றும் கூட்டிணைவை ஊக்குவிக்கும் அதேவேளை, தமது கனவுகளை நனவாக்கிக்கொள்வதற்கான முயற்சியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறன்களையும் நம்பிக்கையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் வழங்குகிறது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM