ரணில் சென்ற பாதையில் நாங்கள் செல்லவில்லை - வைத்தியர் நஜித் இந்திக

Published By: Digital Desk 2

05 Dec, 2024 | 06:13 PM
image

(எம்.ஆர்.எம் வசீம் , இராஜதுரை ஹஷான்)

74 ஆண்டு கால அரசியலை நாங்கள் சபிக்கவில்லை. மாறாக  74 ஆண்டுகால ஆட்சியின் பொருளாதார  நெருக்கடிகளையே சுட்டிக்காட்டினோம். முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் அரசாங்கம் செல்லவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில்  மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டிவிட்டதாக  எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது   தவறானது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால்  நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும்,  முஸ்லிம் சமூகத்தினர் தாடி வளர்க்க முடியாது, போயாவுக்கு விகாரைக்கு செல்ல முடியாது. தமிழ் மற்றும்  முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகள் மறுக்கப்படும் என்று யார் வெறுப்பினை தூண்டி விட்டது. எதிர்தரப்பினரே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் வெறுப்பினை தூண்டிவிடவில்லை. 74 ஆண்டுகால அரசியல் சாபம் என்று குறிப்பிடவில்லை. மாறாக 74 ஆண்டுகால ஆட்சியினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையே விமர்சித்தோம். ஆகவே மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை குறிப்பிடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் சென்ற பாதையில் தற்போதைய அரசாங்கம் செல்வதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பாதையை ஆராய வேண்டும்.  1977 முதல் 1994 , 2001 முதல் 2003 , 2015 முதல் 2019 மற்றும் 2022 -2024  என்ற காலப்பகுதியில்  ரணில் விக்கிரமசிங்க அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்ற அடிப்படையில் பதவி வகித்துள்ளார்.

அரச வளங்களை தனியார் மயப்படுத்துவதும், மிகுதியான வளங்களை விற்பதும் தான் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை .இவரது அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை இந்த நாட்டுக்கு எவ்வாறான  மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை  ஆராய வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு இணக்கமான கொள்கைகளையே எதிர்தரப்பினர்  மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள்.  ஆனால் மக்கள் அவற்றை  ஏற்றுக்கொள்ளவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணான கொள்கைகளை நாங்கள் முன்வைத்ததால் தான் மக்கள்  எமக்கு ஆதரவளித்தார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19