ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 145வது நினைவு தினம் வவுனியாவில் இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் தொடர்பான நினைவுரைகளை பாடசாலை மாணவர்களும், தமிழ்மணி, அகளங்கன் ஆகியோரும் நிகழ்த்தியிருந்தனர்.
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த சிலையானது முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இலுப்பையடி தரிப்பிடத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM