மேஷம்
வீரியமும், விவேகமும் கொண்டு செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குருவும், ராசிநாதன் சுகஸ்தானத்திலும் அமர்ந்தும் சுகஸ்தானாதிபதியான சந்திரன் ராசியை பார்ப்பதும் உங்களின் செய்யும் விளங்குவீர்கள். லாபஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்று இருந்தாலும் உங்களின் ராசியை சனி பார்பையிடும் போது பல்வேறு பாதிப்புகளை அடைவீர்கள் என்றாலும் சனி நீட வீடு என்பால் கெடுபலன்கள் அதிகம் இருக்காது.
கல்வியிலும், அறிவாற்றலிலும் சிறந்து விளங்கும் மாணவர்களாக உருவாகுவீர்கள். ஆறாமிடத்து அதிபதி எட்டில் இருப்பதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது படி உங்களின் அன்பும் அறிவும் பன்மடங்கு பெருகும். உங்களின் பஞ்சமாதிபதியான சூரியன் எட்டாமிடத்தில் அமர்வதால் இதுவரை அரசு சார்ந்த காரியங்கள் தடைபட்ட நிலைமாறி நன்மை உண்டாகும்.
காலத்தின் கட்டாயமாக சில காரியமும் உங்களுக்கு சாதகமாக அமையும் இனி பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். தனஸ்தானத்தில் அமர்ந்த குரு வக்கிரகதியில் இருப்பதால் எளிமையாக பணவரவு இருக்காது. சிரமம் கொண்டு வருமானம் பார்க்கும் நிலை உண்டாகும்.
ராசிநாதன் செவ்வாய் சுகஸ்தானத்தில் வக்கிர பெறுவதால் உடல் வசதி சின்ன சின்ன மன கசப்புகளும் குடும்ப சச்சரவும் உண்டாகும். பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து தொழிலிலும், உத்தியோகத்திலும் நற்பலன்கள் பெற்று தருவார்.
அன்பு மனைவியும், அறிவு குழந்தையும் இம்மாதம் முழுவதும் சரியாக மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். தொழிலிலும் உத்தியோகத்திலும் பொது வாழ்விலும் சிறப்பாக இருப்பீர்கள். கலைதுறையினர் முன்னேற்றம் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
27-12-2024 வெள்ளி பகல் 02.35 முதல் 29-12-2024 ஞாயிறு இரவு 12.18 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரின் வழிபாடும், நெய் தீபமும், சிவப்பு நிற மாலை அணிவித்து வேண்டிக்கொள்ள சகல காரியமும் சிக்கலின்றி சிறப்பாக நடக்கும்.
ரிஷபம்
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து காரியமும் தானே செய்யும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக் ராசியில் குருவும் தொழில் ஸ்தானத்தில் சனியும், அமர்ந்து உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செயல்களும் உண்டாகும் வழியை தேடுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் நமது தேவைகளுக்கு தனது விருப்பங்களுக்கு தகுந்தபடி சகல காரியங்களையும் செய்து கொள்வீர்கள். அரசியலில் புதிய பதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
உங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் தந்தையின் தொழிலை தானும் செய்யும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். நீங்கள் நீண்ட நாட்களாக விரும்புகின்றாரிடம் உங்களின் காதல் விருப்பத்தை சொல்லாமல் இருந்து வந்தீர்கள். இம்மாதம் அதனை வெளிபடுத்துவீர்கள். உங்களின் ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் இருப்பதால் உடனே அதற்கு பதில் தரவில்லை என்றாலும் கூட அதை புரிந்து கொள்வார்கள்.
பொது வாழ்வில் நீங்கள் உங்களின் அன்புக்கு உரியவர்களுக்கு முடிந்து அளவு உதவிகளை செய்வீர்கள். சிலருக்கு அரசியலில் புதிய பதவி கிடைக்க பெறுவீர்கள். எந்த தொழில் செய்தாலும் அதில் உறுதியுடன் இருந்து செயல்படுவீர்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும். நினைத்தபடி செயல்பட்டு வளம் பெறுவீர்கள். பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
உங்களின் முயற்சிகளில் சிறிய தடை வந்து கொண்டிருக்கும் அதனை எளிதில் தீர்த்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சில நிகழ்ச்சி அமையும். உங்களின் எண்ணம் போல அமையாமல் விருப்பமின்றி கலந்து கொள்வீர்கள். பொருளாதாரத்திலும், பணபுழக்கத்திலும் ஓரளவு தன்மிறைவு பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
02-12-2024 திங்கள் மாலை 04.39 முதல் 04-12-2024 புதன் கிழமை இரவு 11.40 மணி வரை.
29-12-2024 ஞாயிறு இரவு 12.19 முதல் 01-01-2025 புதன் கிழமை காலை 07.36 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் 09.00 - 10.30 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக தடையின்றி நடக்கும்.
மிதுனம்
வைராக்கியமும், ஆற்றலும் நிறைந்து விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்திலும், தனஸ்தானதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் அமர்ந்து இருப்பது தனாதிபதி லாபஸ்தானத்தை பார்வை இடுவதால் பொருளாதாரத்தில் வருமானம் வந்தாலும் எதிர்பாராத செலவுகள் வந்து மறையும். லாபாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தில் அமர்ந்து நீசம் பெறுவதால் முன்னேற்றம் தடைபட்டு பின்பு சரியாகும்.
பாக்கியஸ்தானத்தில் சனி அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதாலும் பஞ்சமாதிபதி சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் எத்தனை விதமான துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை உருவாகும். உங்களின் யோகாதிபதிகளான சுக்கிரனும், சனியும் இருக்கும் இடத்தை வைத்து உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும்.
சுக்கிரன் கேந்திரத்திலும் சனி திருகோணத்திலும் அமர்வது உங்களுக்கு தொழிலிலும் செயலிலும் மேன்மை உண்டாகும். இம்மாதம் உங்களின் பிரியமானவரிடம் உங்களின் காதலை சொல்லும் காலமாக அமையும். பல்வேறு தடை வந்து எப்படியாவது வெளிபடுத்த வேண்டுமென்று நினைத்திருந்த உங்களின் வெளிபாடுகள் தைரியமாக சொல்லி விடுவீர்கள். அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள்.
பொது வாழ்வில் உங்களின் பங்கு சிறப்பாக இருக்கும். கருத்து வேறுபாடுகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல நிகழ்ச்சிகள் வந்து அடிக்கடி கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் லட்சிய கனவு நிறைவேறும் காலமாக அமையும். எளிமையாக செயல்பட்டு திறமுடன் செயல்படுவீர்கள்.
யாரையும் பகைக்கு கொள்ள விரும்பமாட்டீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வளம் பெறுவீர்கள். விளையாட்டு தொழில் சிறந்து விளங்குவீர்கள். தொலைதொடர்பு துறையில் மேன்மை அடைவீர்கள். புதிய தொழில் நுட்பம் மூலம் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
04-12-2024 புதன் இரவு 11.41 முதல் 07-12-2024 சனி அதிகாலை 04.27 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு அன்று மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து வலம் வந்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வேண்டி கொள்ள சகல காரியமும் வெற்றியும் நன்மையும் உண்டாகும்.
கடகம்
காலத்தை வீணடிக்காமல் தொடர்ந்து சேலை செய்யும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்தும். குரு லாபஸ்தானத்தில் அமர்ந்தும் இருப்பது உங்களின் லட்சய கனவுகள் சிறப்பாக இயங்க செய்யும் தனாதிபதி சூரியன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் அனைத்து காரியங்களிலும் நன்மையை தரும்.
உங்களின் யோகாதிபதி செவ்வாய் ராசியில் அமர்ந்தாலும் நீசம் பெறுவதால் சிலருக்கு எடுத்த காரியம் தடைபடும். முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பது நல்ல முன்னேற்றமாக அமையும். எதிலும் நினைத்த காரியத்தை அடைய வைக்க பல வழிகளில் முயற்சி செய்வீர்கள். பல காரியங்கள் சாதகமாக அமையும்.
அரசியலில் உங்களின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்றாலும் கூட வாழ்க்கைக்கு எது தேவை எது அவசியம் என்று உணர்ந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகங்கள் உங்களுக்கு புத்துர்ணவுகளை தரும். ஏன் எதற்கு என்று கேட்டவர்களுக்கு தக்க பதிலடி தருவீர்கள்.
பொது வாழ்வில் உங்களின் அனுபவம் எதிர்கால நலனை பற்றி சிந்திக்கும்படி அமையும். வாழ்நாளில் அதன் வழியில் உங்கள் பயணம் வெற்றிகரமாகவும் தெளிவாகவும் அமையும் அடுத்தவர் பார்வைக்கு உங்களின் செயல் நிதானமாக தெரியும். நீங்கள் எதிலும் செயலில் தன்மையை உணர்ந்து அதிலிருந்து மிளவும், அதனை எப்படி செய்தால் நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும் மென்று செயல்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு கலை ஆர்வம் இருக்கும். அதனை செயல்படுத்தி சில காலம் பொருத்திருக்க வேண்டும். எல்லாம் நன்மையாக அமையும். கன்னி கரில்லா காரியங்களில் ஆச்சரியமான விசயம் நடந்து பிரம்மித்து விடுவீர்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
07-12-2024 சனி அதிகாலை 04.28 முதல் 09-12-2024 திங்கள் காலை 07.36 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு அன்று ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு வைரவர் வழிபாடு செய்து எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை சாத்தி எள் அன்னம் வைத்து வழிபட்டு வர உங்களின் அனைத்து காரியமும் நன்மையை தரும்.
சிம்மம்
துணிச்சலுடன் செயல்பட்டு எதையும் சாதிக்கும் சிம்மராசி வாசகா்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானதிபதியுடன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில்ஸ்தானத்தை பார்வை இடுவதால் தொழிலில் மென்மேலும் நல்ல வளா்ச்சியை பெறுவீர்கள் கடந்த காலத்தில் பல நெருக்கடிகளை அடைந்து சில விசயங்களில் பல் வேறு மனவேற்றுமைகளையும் சஞ்சலங்களையும் அடைந்தீா்கள் இனி அந்த நிலை மாறி நல்ல பலன்கள் உண்டாகும்.
தொழில்ஸ்தானத்தில் குரு தனித்து இருப்பது நல்லதல்ல அந்தணன் தனித்திருக்கம் போது அவதி கூடும் என்பது போல் பலரருக்கு தொழிலில் பிரச்சனை உண்டாகும்
நினைத்தபடி சில காரியம் நடந்து உங்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.
தனஸ்தானத்தில் கேது அமா்ந்து கேதுவை குரு பார்ப்பதால் எதிர்பாரத சில அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கபெறுவீர்கள் நீங்கள் எதிர்பார்த்த காரியம் கை கூடும் தாமதமான சில விசயங்கள் சிக்கிரம் நடக்க துவங்கும்.
களத்திர ஸ்தானத்தில் சனி அமர்ந்து ராசியை பார்ப்பதால் கணவன் மனைவி உறவுகளில் சில சச்சரவு உண்டாகும் என்பதால் முடிந்த வரை வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியலில் முக்கியத்துவம் பெறுவீர்கள்.
அரசாங்கத்தின் உத்தியோகம் பார்ப்பவருக்கு பதவி உயா்வும் மாரியதையும் கிடைக்கும் குறை சொன்னவா்கள் பாரட்டுவார்கள். கலை துறையினருக்கு புதிய வாய்புகள் அமையும் சிலருக்கு அரகேற்ற நிகழ்ச்சியில் அனைவரின் பாரட்டு கிடைக்கும் தேவைகளுக்கு பண உதவி கிட்டும்.
சந்திராஷ்டம நாட்கள்:
09.12.2024 திங்கள் காலை 7.37 முதல் 11.12.2024 புதன் காலை 1.00 மணிவரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, மஞ்சள், நீளம்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய், வெள்ளி கிழைமைகளில் அம்மன் வழிபடு செய்வது,வெள்ளை நிற பூ சாத்தி நெய் தீபம் இட்டு வேண்டிக்கொள்ள சகலகாரியமும் நினைத்தபடி சிறப்பாக நடக்கும்.
கன்னி
எல்லோரிடமும் அன்புடனும் நெகிழ்ச்சியுடனும் பழகும் கன்னிராசி வாசகா்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதுடன் லாபாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் அமா்வதுடன் நீங்கள் நினைத்த காரியம் சிறப்பாக அமையும் எதிலும் தனிதிறமை கொண்டு செயல்படுவீா்கள் குணம் நிறைந்த எண்ணங்களால் அனைவருடனும் அனுசரித்து செல்லும் பக்குவம் கொண்டு செயல்படுவீா்கள்.
அட்டம ஸ்தானாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் நீசம் பெறுவதால் கொடுத்த இடத்தில் பணம் வர பெறுவீா்கள்.சுமையாக இருந்து வந்த சில காரியம் எளிதில் நடக்கபெறுவீா்கள்.
அறிவியல் ஆராச்சியாளா்கள் புதிய கண்டுபிடிப்பை பெற்று வளம் பெறுவீா்கள் கோபத்தை குறைத்து கொண்டு சரியான பாதையை தோ்வு செய்து வளம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களும்,நல்ல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமையும்.
அரசியலில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கெவீா்கள் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கபெறுவீர்கள் பெண்களுக்கு முக்கியதுவம் கிடைக்கும். வேலை வாய்ப்பு தொழில் செய்ய வங்கி முலம் பொருளதார மேன்மை கிடைக்கபெறுவீா்கள்.
யாரையும் எதறகாகவும் முழுதாக நம்பி விடமாட்டிர்கள் திட்டமிட்டகாரியம் தாமதமானாலும் விரைவில் நடக்கும். தொழிலாளா்களின் நன்மைக்கு பாடுபட்டு அவா்களின் கோரிக்கை நிறைவேற உதவி செய்வீா்கள். உங்களின் தேவைக்கு பண வரவு கிடைக்க பெறுவீா்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
11.12.2024 புதன் காலை 10.01 முதல் 13.12.2024 வெள்ளி பகல் 12.32 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, வென்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழைகளில் பெருமாள் தரிசனம் அனுமன் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி 5 நிமிடம் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லி வேண்டி கொண்டு வர உங்களின் அனைத்து குறையும் முழுமையாக நீங்கும்.
துலாம்
வலிமை உணர்ந்து பிறரிடம் தைரியமாக பேசும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி சூரியன் தனஸ்தானத்திலும் ராசி அதிபதி மூன்றாமிடத்திலும் அமர்ந்து உங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்தருள்வார்கள். எதை செய்தால் அதற்காக முயற்சிகளை செய்து வருவீர்கள். இதற்கு ராசிநாதன் முழு ஒத்துழைப்பை தருவார்.
பஞ்சமத்தில் சளி அமர்ந்து தனஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் யோகாதிபதியான சனியின் செய்வார். அரசியலில் முக்கிய பொறுப்புகள் வகிக்க வேண்டிய வாய்ப்புகள் அமையும். ராசியில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்து களத்திரஸ்தானதிபதி செவ்வாய் தொழிலில் ஸ்தானத்தில் இருப்பினுப்பும் புதிய தொழில் ஸ்தானத்தில் இருப்பினும் புதிய தொழில் முயற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துக் கொள்வது நல்லது.
எதையும் புதுமையாக செய்ய வேண்டுமென்று செயல்களில் சீரான முன்னேற்றத்தை அடைய கூடிய வாய்ப்புகளை பெற உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையில் சில நேரம் சில இடையூறுகள் வந்து தொல்லைகளை உருவாக்கும். பாதுப்பான வாழ்க்கை சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தொல்லை கொடுத்து கொண்டிருந்தவர்கள் இனிவிட்டு விலகுவார்கள்.
கலைத்துறையின் சொந்த முயற்சியில் வளம் பெறுவீர்கள். கால சூழ்நிலைக்கு ஏற்பட உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெண்களின் சில கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறவும் சிறு தொழிலில் மீண்டும் வளம் பெற நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
13-12-2024 வெள்ளி பகல் 12.33 மணி முதல் 15-12-2024 ஞாயிறு மாலை 04.07 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழகிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி மனதில் உங்களின் கோரிக்கையை சொல்லவா விரைவில் உங்களின் கோரிக்கை முழுமையான நிறைவேறும்.
விருச்சிகம்
நினைத்ததை நினைத்தபடி செய்ய வேண்டுமென்று நினைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் அமர்ந்து குருவை பார்ப்பது சிறப்பான நற்பலன்களை தரும் லாபாதிபதியுடன் பெறுவது தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் வியாபார யுக்திகளையும் அனுபவத்தையும் தருவார்கள்.
உங்களின் ராசியை சனி பார்ப்பது தொய்வு பெற்று தொழில் வாய்ப்புகள் இனி செயல்பட துவங்கும். மருத்துவ துறையில் பணிபுரியும் உங்களுக்கு சிறப்பான நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். பஞ்சமஸ்தானத்தில் ராகு அமர்ந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பார்கள்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முழுமையான பங்குகளை வசித்து உரிமை பெற்று தருவீர்கள். சில நேரம் உங்களின் செல்வாக்கு பலமடங்கு பெருகும். உங்களின் வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமை பட்டு வருவார்கள். எதற்கு கவலை படமாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சீர்த்திஸ்தானத்தையும் உச்ச வீட்டையும் பார்ப்பதும், சுகஸ்தானத்தை பார்ப்பதும். உங்களின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும்.
பொது வாழ்வில் மக்களின் முறைகளை கேட்டு அறிந்து அதற்கு தகுந்த சேலைகளை செய்து வருவீர்கள். தேவைபடும் போது கோபபடுவீர்கள். அந்த கோபம் அர்த்த முன்னதாக இருக்கும். கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்பது போல கோபத்தை கூட சுகமான அனுபவமாக ஆக்கி கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு நல்ல வெகுமதி கிடைக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் நல்ல வளர்ச்சியையும், பாராட்டையம் பெறுவீர்கள். சகோதரி மூலம் சில காரியம் வெற்றி கரமாக அமையும். உங்களை மதித்து நடப்பவருக்கு உங்களின் வழிகாட்டுதல் பயன் தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
15-12-2024 ஞாயிறு மாலை 04.08 மணி முதல் 17-12-2024 செவ்வாய் இரவு 09.33 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு கேது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை சாத்தி உடல் ஊனமுற்றோருக்கு அன்னதானம் இட்டு வேண்டுதலை சொல்லிவர தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
தனுசு
தனக்கென்று ஒரு கொள்கைகளை வகுத்து செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி சீர்த்தி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது எடுத்து காரியம் மேன்மை அடையவும். தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவும் பயனுள்ள விடயங்களை மேம்படுத்திக் கொள்ள உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். ராசிநாதன் குரு ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பது உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும்.
உங்களின் தொழில் தடங்கள் ஏற்பட்டாலும்கூட சுமைகளை நீங்கள் தங்கி விரைவாக செயல்படதுவங்குவீர்கள். ஓன்லைன் வர்த்தகம், வெளிநாட்டு தொழில் வழிகளில் புதிய முதலீடுகளை தற்சமயம் நிறுத்தி வைத்து கொள்வது நல்லது. பங்கு சந்தை சில காலம் பெரிய சரிவை ஏற்படுத்தும் மீறி செயல்பட்டால் பாதிப்பை தான் சந்திக்கும் நிலைவரும்.
அரசியலிலும், வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவத்தாலும் இனி உங்களின் வாழ்க்கை மேம்பாடு கொள்ளும். சிரமங்களை தங்கி வழிநடத்தி வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு முக்கிய நிகழ்ச்சிகளின் மூலம் ஏற்றம் பெறுவீர்கள். சாதாரண காரியங்களை கூட சவாலாக சந்தித்து மேன்மை அடைவீர்கள்.
உங்களின் யோகாதிபதி பனிரெண்டில் மறைவு பெறுவதால் யோக பலன்கள் சற்று தாமதமாகி மாத கடைசியில் நன்மை பெறுவீர்கள். அரசியலில் உங்களின் பங்கு நன்மையை தரும். காரணமில்லாத சில விடயங்கள் தடைபட்டு நின்றுவிடும். இம்மாதம் உங்களுக்கு சிறப்பு இல்லை என்றாலும்கூட பெரிய பாதிப்பை தராது.
நண்பர்களுடன் பழகும் போது பொருயோ, பணமோ கொடுத்து உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. தோல்விக்கு கண்டு துண்டு விடாமல் வெற்றியை கண்டு மகிழ்ந்து விடாமல் எப்பொழுதும் சமமாக நினைத்து வாழ்ந்து வந்தால் உங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்க பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
17-12-2024 செவ்வாய் இரவு 09.34 மணி முதல் 20-12-2024 வெள்ளி அதிகாலை 05.20 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு நெய் தீபம் ஏற்றி சிவப் பு நிற பூ வைத்து உங்கள்னி வேண்டுதலை சொல்லி விட்டு பறவை, மிருகங்களுக்கு உணவு தந்து தொடர்ந்துவர சகலமும் வெற்றியை தரும்.
மகரம்
சாதனை படைக்க வேண்டுமென்று எண்ணி செயல்படும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இருப்பதும் தனஸ்தானத்தில் ராசிநாதன் சனி அமர்ந்து சுகஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் தொழிலில் நல்ல மூன்றாமிடத்தில் ராகு அமர்ந்து செயலில் துணிச்சலையும், வெற்றியையும் அடைய செய்யும் உங்களின் யோகாதிபதி சுக்கிரன் விரையஸ்தானத்தில் அமர்ந்திருப்பது வீண் அலைச்சலையும், வெளியூரின் பயணம் செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.
உங்களின் ராசியில் உச்சம் பெறும் செவ்வாய் உங்களின் ராசியை பார்ப்பது மனதில் தைரியத்தையும் அசாத்தியமான துணிவையும் தரும். இதன்.மூலம் முக்கிய காரியங்களில் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள். நல்லதை மட்டும் செய்யும் உங்களின் நல்ல குணத்திற்கு எல்லாம் சிறப்பாக அமையும்.
அரசியலில் புதிய நல்ல திருப்பங்களை அடைவீர்கள். எதிலும் உங்களின் செல்வாக்கு பெறுவீர்கள். நிலம் சம்மந்தமாக பல நாட்கள் தடைபட்ட நிலை மீண்டு சுபிட்சம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளியூர்களில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.
பகுத்தறிவு பேசி உங்களிடம் வாக்கு வாதம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வெல்வீர்கள். தொழிற்சங்கத்தின் முக்கிய பங்கு வசித்து வாழ்வில் தொழிலாளர்களின் மேன்மைக்கு பல நல்ல காரியங்களை செய்வீர்கள்.
குலதெய்வ வழிபாடு செய்து புனித தீர்த்த பாத்திரை சென்று வந்து உங்களின் ஆன்மீக சேலையை மேம்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
20-12-2024 வெள்ளி அதிகாலை 05.21 முதல் 22-12-.2024 ஞாயிறு மாலை 03.35 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு மாலை சாத்தி விளக்கு எண்ணெய், நெய் கலந்த தீபமேற்றி வேண்டிக் கொள்ள எல்லா நலன்களும் சுப காரியமும் உண்டாகும்.
கும்பம்
நிலையான தொழிலும் உறுதியான மனமும் கொண்ட கும்பராசி வாசகா்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமா்ந்தும் உங்களின் யோகாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் அமா்ந்தும் தனஸ்தானத்தில் ராகு அமா்வதும் குரு மறைவு ஸ்தானத்தின் பார்வை இடுவது உங்களின் ஒவ்வொரு செயலிலும் துடிப்புடனும் ஆக்க பூா்வமாகவும் இருக்கும்.
சிலரை பற்றி கவலைபடாமல் எதிர் காலத்திற்கு தகுந்தபடி நல்ல வளா்ச்சியை பெறுவீா்கள்.சிலருக்கு சின்ன சின்ன அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தொழிற்சங்கத்தின் முக்கிய முடிவுகளுக்கு உங்களின் பங்கு நனறாக இருக்கும் அரசியலலும் பொதுவாழ்விலும் உங்களின் செயல்பாடுகள் சிறபாக அமையும்.
அரசியலில் பழைய நண்பா்கள் தொடா்பு பயனுள்ளதாக அமையும் பொது காரியளின் உறுதியான முடிவுகளையும் செயல்களையும் செய்து பாரட்டுகள் பெறுவீா்கள் பெண்களுக்கு நினைத்த காரியம் விரைவில் நடக்கும் உடல் நலனின் சிறு உபாதைகள் உண்டானாலும் பாதிப்பை தராது.
தொழிலில் ஸ்தானத்தில் சூரியனுடன் அட்டமாதிபதி இனைவு பெறுவது தொழிலில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் அமையும் பொது நலனின் அக்கறையுடன் இணைந்து செயல்பட்டு எல்லோருக்கம் பயன் அளிக்கும் விதமாக செயல்படுவீா்கள்
கலைதுறையினா் முக்கிய வாய்புகளும் இணைந்து செயல்படும் சூழ்நிலையும் உண்டாகும் எடுத்த செயலை தவறாமல் செய்து நல்ல பலன் பெறுவீா்கள் முடியவெடுத்த பிறகு பின்வாங்கும் போக்கை கைவிட்டு தொடர்ந்து செயல்படுவீா்கள் குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்சியுடன் வழி நடத்தி செல்வீா்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
22.12.2024 ஞாயிறு மாலை 3.36 மணி முதல் 25.12.2024 புதன் அதிகாலை 3.10 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம் வென்மை சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு தென்கிழக்கு வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி சனி ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மிளகு 9கட்டி திரி இட்டு மனம் உருக வேண்டிகொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
மீனம்
உண்மையும் உழைப்பும் கொண்டு செயல்படும் மீனராசி வாசகா்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் முயற்சி ஸ்தானத்திலும் தனஸ்தானத்திபதி செவ்வாய் பூா்வபுண்ணிய ஸ்தானத்திலும் அமா்ந்தும் இருப்பது உங்களின் ஒவ்வொரு செயலும் பாரட்டும்படி அமையும் உழைப்பையும் தொழிலில் நோ்மையும் உங்களின் முதலீடாக செயல்பட்டு ஏழரைசனிகாலமாக இருந்தாலும் தொடா்ந்து பணி செய்து வருவீா்கள் உங்களின் செயலுக்கு தகுந்த வெற்றியை பெறுவீா்கள்.
உங்களின் அட்டமாதிபதி சுக்கிரன் தனித்து தொழில்ஸ்தானத்தில் இருப்பது செய்யும் தொழிலில் சில தடைகளும் வளா்ச்சிக்கு செயல்திறனும் இன்றி கலக்கம் உண்டாகும். எனினும் உங்களிக்கு பக்கபலமாக சகோதா்களும், நண்பா்களும் உதவி செய்வர்கள். விரையசனி காலத்தில் புதிய தொழில் துவங்குவதும் ஒருவிசயத்தில் யாரையும் முழுமையாக நம்பிவிடுவது நல்ல தல்ல ஆண்லைன் வா்த்தகத்தில் இழப்புகள் ஏற்படும் என்பாதல் பல ஆசை வார்தைகளை நம்பி ஏமாறாதீா்கள்.
கலைதுறையினருக்கு வரவேற்பு இருக்கும் சிலருக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும் வாய்ப்பு அமையும் மாணவா்களுக்கு கல்வியில் மந்த நிலை உருவாகும் ஞாபகமறதி உண்டாகும்.
வெளிநாடு வசிக்கும் சிலருக்கு எதிர்பாரத செலவினம் உண்டாகும் எதையும் பற்றி கவலை கொள்ளாமல் தொடா்ந்து உங்களின் செய்து வருவதன் மூலம் கிரக அமைப்புகள் எப்படி இருந்தாலும் அதற்கு தகுந்தபடி உங்களின் செயல்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நன்மையை பெறுவீா்கள்.
வங்கி மூலம் கடன் பெறுவதும் அதன் மூலம் தொழில் வளா்ச்சியை பெறும் சூழ்நிலை உண்டாகும் இம்மாத நிலையை உணா்ந்து புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்:
25.12.2024 புதன் அதிகாலை 3.11 மணி முதல் 27.12.2024 வெள்ளி பகல் 2.34 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு தெற்கு தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன் ஞாயிறு புதன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவா்க்கு 8 நல்லெண்நெய் தீபம் மேற்கு
மிளகு கலந்த அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிகொள்ள சகல தோசம் நீங்கி நன்மை உண்டாகும்.
(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM